உலகிலேயே ஆன்லைனில் இருக்கக்கூடிய மிகப்பெரிய சந்தை அமேசான் தான். இந்த உலகத்தில் ஏகப்பட்ட Affiliate Marketplaces இருந்தாலும் அமேசான் தான் ஒவ்வொருவரின் பொருட்களை விற்பனை செய்ய முதல் தேர்வாக இருக்கிறது. இதனால் தான் மக்கள் பொருட்களை அதில் திரும்ப திரும்ப வாங்குகிறார்கள்.
அமேசான் இன் Affiliate link இல் இணைத்துவிட்டால் அவர்கள் சில பொருள்களுக்கான விளம்பர Code ஐ வழங்குவார்கள். அதனை நீங்கள் உங்களது இணையதளத்தில் போட்டுக்கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு ஒரு Apple 11 க்கான code வாங்குகிறார்கள் என வைத்துக்கொண்டால் அதனை உங்களது இணையதளத்தில் போடும்போது அந்த விளம்பரம் தோன்றும். அதனை உங்களது இணையதளத்திற்கு வருபவர்கள் கிளிக் செய்து அந்த மொபைலை வாங்கினால் அமேசான் ஒரு குறிப்பிட்ட தொகையினை உங்களுக்கு வழங்கும்.இந்த கமிஷன் அதிகமாக கிடைக்காவிட்டாலும் எதிர்காலத்தில் அமேசான் affiliate மூலமாக அதிகமாக பணம் சம்பாதிக்க வாய்ப்பு அதிகரிக்கும்.
இந்த affiliate Marketing நீங்கள் விற்பனை செய்கிற பொருளின் விலையில் 10 சதவிகிதத்தை உங்களுக்கு கமிசனாக தரும். அது எந்த பொருளை விற்பனை செய்கிறீர்கள் என்பதை பொருத்து அமையும்.நீங்கள் ஒரு போனை பற்றி முழுவதுமாக விமர்சனம் எழுதி அந்த போனுக்கான amazon affiliate link -னை கொடுக்கலாம். 15 நிமிடங்களை செலவழித்து மொபைலுக்கான சிறந்த ஆஃபர்களை எடுத்து, சேர்ப்பதன் மூலம் கூடுதலான பணம் சம்பாதிக்கலாம்.