Mercedes Benz EQS Electric காரின் சிறப்பம்சங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம், எல்க்ட்ரிக் பிராண்ட் இக்யூ- உடன் முழுமையான எல்க்ட்ரிக் எஸ்யூவி காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது.


இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார்கள் வரிசை கட்டி வரும் நிலையில், அதிக சொகுசான எலெக்ட்ரிக் காரை விரும்பும் பெரும் கோடீஸ்வர வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் லாங் வீல் பேஸ் மாடல் அளவுக்கு உட்புறத்தில் மிக தாராளமான இடவசதியை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மஹாராஷ்டிர மாநிலம், புனே அருகில் சகன் என்ற இடத்தில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஆலையில் இந்த கார் அசெம்பிள் செய்யப்படும்.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் எலெக்ட்ரிக் சொகுசு காரின் EQS 450+ என்ற வேரியண்ட்டில் ஒற்றை மின் மோட்டாருடன் கூடிய ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும், மற்றொரு EQS 580 என்ற வேரியண்ட்டில் இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்ட ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும் இருக்கிறது.

EQS 450+ வேரியண்ட் 334 எச்பி பவரையும், EQS 580 வேரியண்ட் 523 எச்பி பவரை வழங்க வல்லதாக இருக்கும். இந்த இரண்டு வேரியண்ட்டுகளில் EQS 450+ மாடல்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரின் இரண்டு வேரியண்ட்டுகளிலுமே 107.8kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய இக்யூசி எஸ்யூவி-களில் டூயல் மோட்டார் அனைத்து வீல் டிரைவ் லேஅவுட்களுடன் ஒத்திசைவற்ற மின்சார மோட்டார்கள், முன்புர ஆக்சில்களுடன் கூடிய ஒரு மவுண்ட்கள் மற்றும் ரியர் ஆக்சில்களுடன் இருக்கும். இக்யூ மாடல்கள் அதிகபட்ச டிரைவிங் ரேஞ்ச்களாக 417 kms-ஆக இருக்கும். 


இந்த இக்யூ மாடல்கள் டிசி சார்ஜ்ஜர் மூலம் சார்ஜ் செய்தால், 10% முதல் 80% சார்ஜ்-ஆக 40 நிமிடங்கள் எடுத்து கொள்ளும். திறன்களை பார்க்கும் போது, எலக்ட்ரிக் மோட்டார்கள் 760 Nm டார்க் கொண்டதாக இருக்கும். இந்த இக்யூ-கள் 0-100 kmph வேகத்தை 5.1 செகண்ட்களில் எட்டி விடும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் எலெக்ட்ரிக் கார் ரூ.2 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.