பிரக்கோலியில் இருக்கும் பல்வேறு நன்மைகள்

ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் வகையைச் சேர்ந்த ஒரு காய்கறியாகும். உலகிலேயே அதிகமான சத்துள்ள காய்கறிகளில் ஒன்றாக ப்ராக்கோலி கருதப்படுகிறது.


ஒரு கப் பச்சை ப்ரோக்கோலியில் வெறும் 25 கலோரிகள் மட்டுமே உள்ளது. அதிலும் 5 கிராமுக்கும் குறைவான கார்போஹைட்ரேட் இதில் அடங்கியுள்ளது. இதில் கொழுப்புகள் சிறிதும் இல்லை மற்றும் சில கிராம் தாவர புரதங்கள் உள்ளன. ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்துப் பொருள்கள், நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால்களைக் குறைக்க உதவுகின்றன.

ஒரு கப் ப்ரோக்கோலியில், நமது உடலுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் கொலாஜனை ஆதரிக்கும் வைட்டமின் சி 135% சதவீதமும், மற்றும் குரோமியம் 50% க்கும் மேலாகவும் உள்ளது.

மேலும், ஃபோலேட்டுக்கு (folate) 40% க்கும் அதிகமாக உள்ளது. இது நமது உடலுக்கு தேவையான ஒரு வகை வைட்டமின் ஆகும்.இந்த ஃபோலேட்டு நல்ல நினைவு திறன் மற்றும் நல்ல மனநிலையை நாம் உடலுக்கு அளிக்கிறது.

ப்ரோக்கோலியை அடிக்கடி சமைத்து சாப்பிடுபவர்களுக்கு ப்ரோக்கோலியில் இருக்கும் சல்போரபேன் சத்துக்கள் கண்களில் அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் எதிர்காலங்களில் கண் பார்வை மங்குதல், கண் புரை போன்ற நோய்கள் ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது.


பெரும்பாலான காய்கறிகளில் கால்சியம் சத்து இருக்காது; அல்லது குறைவாக இருக்கும். ஆனால் ப்ராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது.

பலவிதமான எரிச்சல்களையும், அலர்ஜிகளையும் போக்குவதற்கு ப்ராக்கோலி மிகவும் பயன்படுகிறது. இதில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் கேம்ப்ஃபெரால் ஆகியவை தான் அலர்ஜிக்கு எதிராக வேலை செய்கின்றன.

ப்ரோக்கோலியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இந்த சத்துக்கள் சருமத்தில் ஈரப்பதம் குறையாமல் பாதுகாப்பதோடு. தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து, தோலில் பளபளப்பு தன்மையை அதிகரித்து, இளமை தோற்றத்தை உண்டாக்குகிறது.