நாட்டுச் சர்க்கரையின் நன்மைகள்

 வெள்ளை சர்க்கரை பயன்பாட்டை குறைத்துக் கொண்டு நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தவும். ஏனெனில் இதில் பல நன்மைகள் இருக்கிறது. 


நாட்டு சர்க்கரையில் பல சத்துகள் உள்ளன. இவற்றில் மிக குறைந்த அளவே கலோரிகள் உள்ளன.கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஜிங்க், செலினியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நாட்டு சர்க்கரையில் நிறைந்துள்ளன.

வெள்ளை சர்க்கரையில் ரசாயனங்கள் கலப்பதை போன்று நாட்டு சர்க்கரையில் ரசாயனங்கள் கலப்பதில்லை. இது முற்றிலும் இயற்கையான முறையில் கரும்பு சாற்றிலிருந்து தயார் செய்யப்படுவதால், இயற்கையாகவே இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. 

நாட்டுச் சர்க்கரை உடலினுள் செல்லும் போது அசிட்டிக் அமிலமாக மாறி, வயிற்றில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரித்து, எளிதில் செரிமானமாகச் செய்யும் இதுவே மலச்சிக்கலை தடுக்க உதவும்.

வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை ஏற்படுத்த கூடும். நாட்டு சர்க்கரை பயன்பாடு இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தாது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெள்ளை சர்க்கரை மற்றும் இனிப்புகளை தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக நாட்டு சர்க்கரையை சேர்க்கலாம். இதில் குறைந்த அளவில் கலோரிகள் உள்ளதால் உடல் எடை குறைய உதவுகிறது.

கிருமிகளால் உடலில் நோய்கள் ஏற்படாமல் காப்பது நமது உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தான். நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவக்கூடியது நாட்டு சர்க்கரை. எனவே நாட்டு சர்க்கரையை உணவில் சேர்ப்பது நல்லது.

செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் உணவில் நாட்டு சர்க்கரையை சேர்த்து கொள்ளலாம். சிறிது இஞ்சியை நீரில் கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்தால் அஜீரண கோளாறுகள் நீங்கும்.


இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைந்திருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவில் இதுவும் ஒன்று.

நாட்டு சர்க்கரையில் வைட்டமின் B வளமான அளவில் உள்ளதால், முக அழகிற்கு உதவுகிறது. சரும வறட்சியை போக்கி, ஈரப்பதத்தை அதிகரித்து முகம் பொலிவடைய உதவுகிறது. மேலும் இளமையான சருமத்தை பெற உதவுகிறது.