இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சுமார் 40 சதவீதம் MSME நிறுவனங்களை நம்பி தான் உள்ளது. இந்தியாவில் பெரும்பாலான MSME நிறுவனங்களுக்கு முறையாக நிதியுதவி கிடைப்பது இல்லை, இதற்குப் பல காரணங்கள் உள்ளது. பொதுவாக MSME நிறுவனங்கள் தங்கள் வர்த்தகக் கணக்குகளை வைத்திருப்பது இல்லை எனக் குற்றச்சாட்டு வங்கிகளிடம் இருந்து எழுகிறது. இதை மாற்ற மத்திய நிதியமைச்சகம் பல சேவைகளை அறிமுகம் செய்து விரைவாகக் கடன் பெறுவதற்கான சேவைகளையும் திட்டங்களையும் அறிவித்துள்ளது.
MSME அரசு வர்த்தகக் கடன் திட்டம்
MSME நிறுவனங்களுக்கான வொர்கிங் கேப்பிடல்-ஐ உருவாக்கும் விதமாக மத்திய அரசு உருவாக்கிய திட்டம் தான் இந்த MSME அரசு வர்த்தகக் கடன் திட்டம். இத்திட்டத்தின் மூலம் MSME நிறுவனங்கள் வெறும் 59 நிமிடத்தில் 1 கோடி ரூபாய் அளவிற்கான கடனுக்கு ஒப்புதல் பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் MSME நிறுவனங்கள் வெறும் 8 சதவீத வட்டியில் அதாவது வெறும் 66 பைசா வட்டியில் கடன் பெற முடியும்.
முத்ரா பிஸ்னஸ் லோன்
இந்தத் திட்டத்தின் கீழ் சிறு வர்த்தகம் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும். இத்திட்டத்தில் கீழ் பொதுத்துறை வங்கிகள் மட்டும் அல்லாமல் தனியார் வங்கிகளும் கடன் அளிக்கும் காரணத்தால் MSME நிறுவனங்கள் கடன் பெற அதிகளவிலான வாய்ப்பு உள்ளது.
கிரெடிட் கேரென்டி பண்ட் ஸ்கீம்
MSME நிறுவனங்கள் பலன் பெற வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட திட்டம் இது. இத்திட்டத்தின் கீழ் MSME நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்திற்காகத் துணை ஈடு எதுவும் இல்லாமல் கடன் பெற முடியும். இந்தக் கடன் புதிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, ஆனால் ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படுகிறது.
உத்தியோகினி திட்டம்
இத்திட்டம் பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு வாய்ந்த கடன் திட்டம். பெண்கள் தொழில் துவங்க விரும்பினால் இதுதான் சரியான திட்டமாக இருக்க முடியும். இத்திட்டத்தின் கீழ் 15 லட்சம் ரூபாய் வரையிலான கடனை 18 முதல் 55 வயதுடைய பெண்களுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்தக் கடன் 15 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகக் குடும்ப வருமானம் கொண்டவர்களுக்கு அளிக்கப்படுவது இல்லை.
நேஷனல் ஸ்மால் இண்டஸ்ட்ரீஸ் கார்பரேஷன் மானியம்
MSME நிறுவனங்களுக்குப் பைனான்ஸ், மார்கெட், டெக்னாலஜி மற்றும் இதர சேவைகளை நாடு முழுவதும் இருக்கும் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே NSIC அமைப்பு மார்கெட்டிங் சப்போர்ட் ஸ்கீம் மற்றும் கிரெடிட் சப்போர்ட் ஸ்கீம் ஆகிய இரு திட்டத்தை உருவாக்கியுள்ளது.