அர்னால்டின் வாழ்க்கை வரலாறு

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், பெயரைக் கேட்டாலே சும்மா அதிரும். ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை "பில்லியன்" நெஞ்சங்களில் குடியிருக்கும் கம்பீர நாயகன். பாடி பில்டராக இருந்த போது அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரின் கட்டழகை கண்டு வியந்த ஆண்களை விட விழுந்த பெண்கள் தான் அதிகம்.


ஆறு முறை தொடர்ச்சியாக மிஸ்டர். ஒலிம்பியா பட்டம் வென்று சாதனைப் படைத்தவர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர். இதுமட்டுமல்லாது ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என இரண்டு முறை முன்னிலை வகித்தவர். மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராக தொடர்ந்து இரண்டு முறை வெற்றிப் பெற்றவர்.

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் தனது பள்ளி வயதில் ஒரு படத்தை காண்கிறார், அதில் அமெரிக்கா காட்சி இடம்பெற்றது இதனை பார்த்த அர்னால்டு நாம் அங்கு செல்ல வேண்டும் என்று அப்பொழுது அவர்கள் எண்ணம் வந்தது. இதைத்தொடர்ந்து அவர் ஒரு மேகசீன் பார்க்கிறார். அந்த மேகசீன் முதல் பக்கத்தில் ஒரு பாடி பில்டர் புகைப்படமும் அவர் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றுள்ளது. இதனை அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் முழுமையாகப் படித்தார். அந்நாள் முதல் இவர் போல் ஒரு பாடி பில்டராக ஆக வேண்டும் என்று முடிவு எடுத்தார். 

ஆனால் அர்னால்ட் சிறுவயதில் மிகவும் ஒல்லியாக இருந்தாராம். இதனால் அர்னால்ட்  நண்பர்களும், பள்ளி மாணவர்களும் இவரை போட்டு அடிப்பார்களாம் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அர்னால்ட் தன் கிராமத்தில் உள்ள ராணுவ வீரர்களுடம் சென்று எனக்கு உங்களுக்குத் தெரிந்த உடற்பயிற்சியினை சொல்லிக் கொடுங்கள் என்று கேட்பாராம். அதனால் அவர்களும் சொல்லிக் கொடுப்பார்கள்  இவர் ஒன்றொன்றாக கற்றுக் கொண்டே, தன் வீட்டில் உள்ள கற்களை வைத்து இவர் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து கொண்டு இருப்பார். இவர் எங்கு பாடிபில்டர் புகைப்படங்களை கண்டாலும் அதை கிழித்துக்கொண்டு தனது வீட்டு சுவரில் ஒட்டி வைப்பாராம்.


தி கவர்னேட்டர், ரன்னிங் மேன், கெனான் ஆப் தி கவர்னர், கெனான் ஆப் ரிபப்லிக்கேன், தி மெஷின் போன்ற பல செல்ல பெயர்கள் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கருக்கு இருக்கிறது.

ஹம்வீ எனும் வாகனத்தை வாங்கிய முதல் அமெரிக்க தனிக் குடிமகன் என்ற பெருமை அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரை சார்ந்தது. இது ராணுவத்தில் பயன்படுத்தப்படும் வாகனமாகும். இதை நிறுத்த இரண்டு சாதாரண காரின் இடம் தேவை.

ஹாலிவுட்டின் காஸ்ட்லி நாயகனாக திகழ்ந்தவர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர். முறையே 1991 மற்றும் 2000 ஆம் ஆண்டு டெர்மினேட்டர் பாகம் இரண்டு மற்றும் மூன்று ஆகிய படங்களுக்கு இவர் வாங்கிய சம்பளம் இவருக்கு ஹாலிவுட்டின் காஸ்ட்லியான நாயகன் என்ற பெருமையை தந்தது. இவர் வாங்கிய சம்பளம் 20 மில்லியன் டாலர் (டெர்மினேட்டர் II) 30 மில்லியன் டாலர் (டெர்மினேட்டர் III)

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் தனது வாழ்நாள் கனவாக அமெரிக்கா செல்ல வேண்டும், பெரிய நடிகராக வேண்டும் என்ற குறிக்கோள்கள் வைத்திருந்தாராம்.. அந்த இரண்டையும் சாதித்து, மாகாண கவர்னராகவும் பதவி வகித்து வருகிறார் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்.

உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில், உலக வரலாற்றிலேயே உடலை மிக கட்சிதமாக மெருகேற்றியவர் என்ற பெருமை அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், 300 எடை வரை தூக்கம் வலிமைக் கொண்டவர்.