உலகில் மொத்தம் 3000 வாழை வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு வாழைப்பழமும் ஒவ்வொரு நோயை குணமாக்கும் தன்மை கொண்டவை.
ரஸ்தாளி பழம்
இந்த பழத்தை கப்பல் வாழைப்பழம் என்றும் கூறுவார்கள்.இந்த பழம் உண்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.இந்தப் பழத்தை உண்டால் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். இதற்கு காரணம் இதில் நிறைந்துள்ள பல்வேறு சத்துக்கள் தான். இந்த பழத்தில் அளவுக்கு அதிகமான மாவுச்சத்து உள்ளது. உணவு உண்ட உடனே இந்த பழத்தை எடுக்கக்கூடாது.உடலில் மந்த உணர்வு ஏற்பட்டு விடும்.சாப்பாட்டுக்குப் பிறகு சிறிய இடைவெளி விட்டு ரஸ்தாளி பழம் உண்ணலாம்.குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை தேனில் குழைத்து சாப்பிட தரலாம். அவர்கள் விரும்பி சாப்பிடுவர்.உடல் எடையைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது.
கற்பூரவள்ளி வாழைப்பழம்
இந்த பழம் அளவில் சிறியதாக காணப்படும். இந்த பழம் தேன் போன்ற தித்திப்பான சுவை கொண்டது. இந்த பழம் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது.இந்த பழத்தை சாப்பிட்டப் பிறகு உடலுக்கு தேவையான சத்து கிடைப்பதால், குழந்தைகள் சுறுசுறுப்போடு காணப்படுவார்கள்.
பச்சை வாழைப்பழம்
பச்சை நிறத்துடன் சற்று நீளமாக காணப்படுதால் இந்த வாழைப்பழம் பச்சை வாழைப்பழம் என்று வழங்கப்படுகின்றது.இந்த பழத்தை சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். வெயில் காலத்தில் சாப்பிட ஏற்ற சிறந்த பழம்.இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் ஜீரண சக்தி அதிகரிக்கும். மலச்சிக்கல் ஏற்படாது.
மலை வாழைப்பழம்
இந்த பழம் சற்று விலை அதிகமானது. இந்த பழத்தின் தனித்துவம் என்னவென்றால் இது மிகவும் ருசியானது ஆகவும் ,மணம் வாய்ந்ததாகவும் இருக்கும். இந்தப் பழத்தை தொடர்ச்சியாக சாப்பிட்டு வர சருமம் பொலிவு பெறும்.இந்த பழத்தில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடல் வலிமை அடையும்.
செவ்வாழை
நோய் எதிர்ப்பு சக்தி; உடலில் தாது பலமும் அதிகரிக்கும். கதளி மற்றும் எலச்சி கதளி ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை உள்ளதால் செல்களின் செயல்பாட்டை சீர்செய்கிறது.
பேயன் பழம்
வயிறு மற்றும் குடல் புண்கள் ஆறும். உடல்சூடு தணியும்.
நேந்திரம் வாழைப்பழம்
இந்த பழம் கேரள மாநிலத்தில் அதிக அளவு காணப்படுகின்றது. இந்த பழத்தை கொண்டு நேந்திரம் சிப்ஸ் தயாரிக்கப்படுகிறது.நேந்திரம் வாழைப்பழம் உடல் எடையை அதிகரிக்க உதவும். இதில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது.மிகவும் மெல்லிய உடல்வாகு கொண்ட குழந்தைகளுக்கு நேந்திரம் பழம் தரலாம். இதன் மூலம் அவர்களின் உடல் எடை கூடி போஷாக்கு பெறுவார்கள்.மேலும் நேந்திரம் வாழைப்பழம் வயிற்றில் உள்ள குடல் புழுக்களை நீக்கும் குணம் பெற்றது.