டுவெயின் டக்ளஸ் ஜான்சனின் வாழ்க்கை கதை

எனது 23 வயதில் வாழ்வில் ஒரு மிகப் பெரும் வாய்ப்பை நான் நழுவ விட்டேன். அதை அறிந்த அனைவருமே என்னை விமர்சித்தார்கள். அத்தோடு எனது வாழ்க்கையே முடிந்து விட்டதாக கூறினார்கள். என்னை போன்றதொரு முட்டாள் இவ்வுலகில் இருக்கவே முடியாது என்றார்கள். இருந்தும் நான் மனம் தளராமல் போராடினேன். எனது தவறுகளை திருத்திக்கொண்டு கடினமாக உழைத்தேன். அவர்களது கற்பனையையும் தாண்டிய ஒரு வெற்றியடைந்தேன் என்கின்றார் ட்வைன் ஜான்சன்


தேங்க்ஸ் கிவ்விங் டின்னர் நாளில் ஜான்சனின் வீட்டில் மட்டும் யாருக்கும் கொடுப்பதற்கு என்று மட்டுமில்லாமல், அவர்கள் உண்ணவே உணவு இல்லாத நிலை.

தான் வாழ்க்கைக்காக, வாழ்வாதாரத்திற்காக ஜான்சனின் தந்தை மல்யுத்தம் செய்வதை வேலையாக கொண்டிருந்தார். ஜான்சனின் தந்தை மட்டுமல்ல, அவரது தாத்தாவும் மல்யுத்த வீரர் தான். மேலும், ஜான்சனின் பாட்டி பெண்களுக்கான மல்யுத்தப் போட்டிகளை ஊக்குவித்து வந்த நபர் என அறியப்படுகிறார்.

இரத்தத்திலேயே மல்யுத்தம் ஊறி இருந்தது ஜான்சனுக்கு. இரத்தத்தில் மல்யுத்தம் ஊறிப்போய் இருந்தாலும், அதனால் அவர்களது பசியைப் போக்கிக் கொள்ள முடியவில்லை. அதன் மூலம் கிடைத்த பணம் அவர்கள் குடும்பத்தை நடத்த பற்றாக்குறையாக இருந்தது. ஆகையால், பசியும், பட்டினியும் அவர்களது அன்றாட வாழ்வில் நீங்கா இடம் பிடித்திருந்தது.

ஒரு நாள் பள்ளி சென்று வீடு திரும்பும் போது, வீடு பூட்டப்பட்டு அதன் மேல் சீல் வைத்து கதவில் ஒரு நோட்டீசும் ஓட்டிச் சென்றிருந்தனர். ஆம்! வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போனதால், அவர்கள் வீடு ஜப்தி ஆனது.

ஒருக் கட்டத்தில் ஜான்சனின் பெற்றோர் விவாகரத்து பெறும் நிலை உண்டானது. கால்பந்தாட்டம் ஆடத் துவங்கினான். அப்போது அவன் மேல்நிலைப் பள்ளி பயின்று வந்தான்.


நல்ல மதிப்பெண் பெற்ற காரணத்தால் யுனிவர்சிட்டி ஆப் மியாமி அவனுக்கு சீட் கொடுத்து அடைக்கலம் கொடுத்தது. பிறகு, மியாமியில் இருந்து கனடா சென்று புரொஃபஷனல் அணியில் விளையாட துவங்கினான். ஆனால், ஓரிரு மாதங்களில் ஒரு காயம் ஏற்பட்ட காரணத்தினால், அந்த அணியில் இருந்து விலகும் நிலை உண்டானது. பார்த்து வந்த வேலை போனது, விளையாடி வந்த அணியில் இருந்து வெளியேறும் நிலை, உடைந்துப் போனான் ஜான்சன்.

அப்போது ஜான்சனிடம் இருந்த கையிருப்பு வெறும் ஏழு டாலர். அன்றைய இந்திய பண மதிப்பில் கூற வேண்டும் என்றால், வெறும் 234 ரூபாய்.

தன் குடும்பத்தின் பாரம்பரிய விளையாட்டை கையில் எடுக்க தீர்மானம் செய்தான் ஜான்சன். தன் அப்பாவை சந்திக்க சென்றான். ஆரம்பத்தில் தன் மகனுக்கு பயிற்சி அளிக்க மறுத்த ஜான்சனின் தந்தை. பிறகு, ஜான்சனிடம் இருந்த ஆர்வத்தை வைத்து அவனுக்கு பயிற்சி அளிக்க முன்வந்தார்.

ஏழு முறை மல்யுத்தத்தில் சாம்பியன் பட்டம் வென்றான் ஜான்சன். பிறகு திரைப்படங்களில் நடிக்க துவங்கினான். தொடர் வெற்றிப் படங்களில் நடித்தான். மல்யுத்தம் மட்டுமின்றி, திரையுலகிலும் தனக்கான தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு, இன்ற உலகில் அதிக ஊதியம் வாங்கும் நடிகராக வளர்ந்து நிற்கிறார் ட்வைன் ஜான்சன் என்கிற தி ராக்.