மனித மூளையைப் பற்றிய அரிதான தகவல்கள்

 நமது மனித உடலும் ஓர் கணினியைப் போன்றது தான். உண்மையில், மனித உடலின் பிரதிபலிப்பு தான் கணினி என்றே கூறலாம். கணினியில் எப்படி ஸ்டோரேஜ் எனக் கூறப்படும் சேமிப்புப் பகுதியோ, அவ்வாறு தான் நமது மனித உடலுக்கு மூளை. இவையின்றி ஓர் அணுவையும் அசைக்க முடியாது.


உங்களது மூளையில் ஒவ்வொரு முறையும் நினைவுகள் சேமிப்பாகும் போது, ஓர் புதிய இணைப்பு உருவாகிறது. அது ஏற்படாவிட்டால் அந்த நினைவு சேமிப்பாகாது. இம்முறையில் ஏதேனும் குறைபாடு ஏற்படுவதால் தான் ஞாபக மறதி போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன.

நம் உடலில் பொதுவாக ஏற்படுவது என்னவென்றால் தலைவலி என்றே கூறலாம் இதற்கு காரணம் உங்கள் கழுத்து மற்றும் தலையின்  நரம்புகளுடன் இணைந்து உங்கள் மூளையில் ஒரு ரசாயன எதிர்வினையை ஏற்படுத்துகிறது இதன்காரணமாகதான்  தலைவலி ஏற்படுகிறது. நாம் அதிக சிந்தனையில் இருக்கும் போது இப்படி நடப்பதால்தான் தலைவலி ஏற்படுகிறது.

ஒரு மனிதனின் மூளையில் சுமார் நூறு பில்லியன் நியூரான்கள் உள்ளன. இவை அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட்டுகொண்டே இருக்கின்றனர் இவை வெளிப்படுத்தும் ஆற்றலை கம்பியூட்டர்களின் மெமரியுடன் ஒப்பிட்டால் 2.5 PETA BYYTES அதாவது 2,50,000 GB ஆகும், இது ஒரு சூப்பர்கம்யூடரின் ஆற்றலுக்கு சமமானது.இவ்வவு ஆற்றல் இருந்தும் நாம் இதைபயன்படுத்துகிறோமா என்பது கேள்விகுறியே.நமது மூளையானது 25 வாட்ஸ் வரை மின்சாரத்தை உருவாக்ககூடியது இதைவைத்து ஒரு மின்விளக்கை கூட எரியவைக்கலாம்.

நாம் அனைவராலும் ஒரே நேரத்தில் நிறைய வேலைகளை செய்ய முடியுமா என்றால் யாராலும் செய்ய முடியாது, ஆம் நம் மூளையால் ஒரு நேரத்தில் ஒரே ஒரு வேலையை மட்டுமே செய்ய முடியும் பல வேலைகளை நம் மூளையால் செய்ய இயலாது.

இந்த உலகில் உள்ள மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தன்னுடைய வாழ்நாளில் 30% பகல் கனவு காண்பதிலேயே செலவிடுகின்றனர் இதற்கு காரணம் நம் மூளையில் ஏற்படக்கூடிய ஒரு சில வேதியியல் மாற்றங்களே ஆகும்.


நாக்கு மட்டுமில்லாது, வயிறு, குடல், கணையம், நுரையீரல், ஆசனவாய், விதைப்பை மற்றும் மூளையிலும் கூட ருசியைக் கண்டறியும் திறன் இருக்கிறதாம்.

நம் மூளையின் மொத்த எடை 1.3 கிலோ அதுமட்டுமின்றி மூளையின் 70%  தண்ணீரால் ஆனது ,நம் உடலில் உற்பத்தி செய்யப்படும் மொத்த இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனில், மூளைக்கு 20%  கிடைக்கிறது

நாம் நிஜத்தில் காணக்கூடிய அனைத்து பொருட்கள் மற்றும் விஷயங்களையும் நேராக காண்பதில்லை அனைத்தையும் தலைகீழாகதான் தெரியும் நம் மூளைதான் அதனை சரிசெய்து நேராக காட்டுகிறது.நம் உடலில் அனைத்து பாகங்களும் 20 வயதிலேயே வளர்ச்சி நின்றுவிடும் ஆனால் மூளை 40 ஆண்டுகள் வரை வளரும் தன்மை கொண்டது.

நமது மூலையில் 60% அளவு வெறும் கொழுப்பு தான் இருக்கிறது.