முத்து எப்படி உருவாகிறது?

சிப்பிகள், கடல் அன்னை தரும் பல பொருட்களில், மிக அழகான மற்றும் சுவாரஸ்யமான ஒரு பொருளாகும் . இது கடல் வளங்களில் முக்கிய பொருளாக விளங்குகிறது. அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித சமுதாயத்தோடு பின்னி பிணைந்துள்ளன. 

சிப்பிகள் என்பது சில வகை கடல் வாழ் உயிரினங்களின் உடலின் ஒரு பகுதி ஆகும். அவை அந்த உயிரினங்களை பாதுகாக்கும் ஒரு கவசமாக இருக்கிறது. அந்த உயிரினங்கள் இறந்ததும், அவைகளின் மிருதுவான உடல் பாகங்களை மற்ற உயிரினங்கள் உண்டு விட்டு சிப்பிகளை விட்டு விடுகின்றன.


கடற்கரைகளில் மணலில் எடுக்கப்படும் வண்ணமயமான சிப்பிகள், கடல் மொல்லஸ்குகள் (Mollusks) எனப்படும் ஒரு வகை உயிரினத்தால் பெரிதும் உருவாக்கப் படுகின்றன. மொல்லஸ்குகள் (Mollusks) பொதுவாக மென்மையான முதுகெலும்பு கொண்ட உயிரினம் ஆகும். இவை மிருதுவான உடலை பாதுகாப்பதற்கும் தமது உருவத்தை மறைப்பதற்கும் ஓடுகளை உருவாக்குகின்றன. இந்த ஓடுகள் பெரும்பாலும் கால்சியத்தை அடிப்படையாக கொண்டே உருவாகின்றன.

முத்து எப்படி சிப்பிக்குள் உருவாகிறது என்பது சுவாரஸ்யமான ஒரு விஷயம். அதுவும் இயற்கை அதிசியமாகவும் உள்ளது. முத்துக்கள் உலகின் வெப்பமான கடல்பகுதியில் மட்டும் அதிகமாக உருவாகின்றன.

உண்மையில் சிப்பிக்குள் தங்களின் எதிரிகளோ, திடப்பொருளோ அல்லது மணல் ஆகியை புகுந்து கொண்டால், அதிர்ச்சியில் தன் புறத்தோல் பகுதியில் நாக்ரே என்ற பொருளை உருவாக்குகின்றது. அந்த எதிரி பொருள் மீது பல படலங்களாக நாக்ரே சூழ்ந்து உருவாகும் ஒரு பொருள் தான் முத்து.


சிப்பிகள் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப்பொருளையும், சில அங்ககப் பொருட்களை சிப்பிகள் உட்கொள்வதால்,முத்து உருவாவதற்கான நாக்ரே மூலப்பொருளை உற்பத்தி செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மொலஸ்க்குகளில் இருந்து உருவாக்கப்படும் முத்துகள் மற்றும் ஓடுகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் ஆபரணங்களில் வடிவமைப்பில் மற்றும் வேறு பல கலைகளிலும் அதனை உபயோகித்தனர். கடல் சூழ்நிலைகளை சீராக்கவும் அவை பெரிதும் துணை நிற்கின்றன. மற்ற உயிரினங்களுக்கு இவை உணவாக இருக்கின்றன. இருந்தாலும், மிகவும் மெதுவாக நகரும் தன்மையை கொண்டிருந்தாலும், இவைகள் இருக்கும் சூழலை வலிமையாக்கும் தன்மை மொலஸ்க்குகளுக்கு உண்டு .

சிப்பி ஓடுகள் பொதுவாக பல நிறங்களில் காணப்படும். அதற்கு காரணம்,அவை உயிரினங்களுடன் பிணைத்து இருக்கும் போது அவை வெளியிடும் கழிவுகள் மற்றும் அசுத்தங்களால் இவைகளின் நிறம் உருவாகிறது. சில நேரங்களில் அந்த உயிரினங்கள் எடுத்து கொள்ளும் உணவு மற்றும் அந்த உயிரினங்கள் வாழும் தண்ணீரின் தன்மை பொருத்தும் சிப்பிகளுக்கு நிறங்கள் வருகின்றன.