ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) என்பது இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (National Payment Corporation of India) அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு கட்டண முறையாகும். இது இரண்டு வங்கிக் கணக்குகளுக்கும் இடையில் உடனடியாகப் பணப் பரிவர்த்தனையை அனுமதிக்கிறது. UPI ஆனது ஏற்கனவே உள்ள IMPS உள்கட்டமைப்பின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே இதை 24 மணி நேரமும் உடனடியாகப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.
ஒருவரின் மொபைல் போன் வழியாக ஒரு பேங்க் அக்கவுன்ட்டிலிருந்து இன்னொரு பேங்க் உடனடியாக பணத்தை மாற்ற யுபிஐ அனுமதிக்கிறது. மொபைல் சாதனங்களில் மட்டுமே ஆப்ஸின் மூலம் பணம் செலுத்த முடியும். யுபிஐ வழியாக பணப் பரிமாற்றம் 24x7 அடிப்படையில் செயல்படுகிறது.
யுபிஐ (UPI) பயன்படுத்த, நீங்கள் ஒரு பேங்க் அக்கவுன்ட் (Bank account) வைத்திருக்க வேண்டும், அதாவது, யுபிஐ (UPI) வசதியைப் பயன்படுத்த உங்கள் பேங்க் உங்களை அனுமதிக்க வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), எச்.டி.எஃப்.சி பேங்க் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (State Bank of India (SBI), HDFC Bank, and ICICI Bank) போன்ற பேங்க்களில் பேங்க் அக்கவுன்ட்டை வைத்திருக்க வேண்டும்.
உங்கள் பேங்க் யுபிஐ பேமெண்ட்டுகளை சப்போர்ட் செய்கிறதா, என்பதை நீங்கள் செக் செய்து பார்த்தவுடன், உங்கள் ஸ்மார்ட்போனில் யுபிஐ சப்போர்ட் ஆப்ஸைப் டவுன்லோட் செய்ய வேண்டும். யுபிஐ மூலம் பணம் செலுத்த பொதுவாக பயன்படுத்தப்படும் ஆப்ஸ்களில் BHIM முக்கியமானது, இது NPCI ஆல் உருவாக்கப்பட்டது, மேலும் சில தனியார் ஆப்ஸ்களிளும் இத்தகைய பேமெண்ட்டுகளை நீங்கள் மேற்கொள்ள முடியும்.
அதிலும் குறிப்பாக பேடிஎம், ஃபோன்பே, கூகுள் பே, அமேசான் பே (Paytm, PhonePe, Google Pay, Amazon Pay) போன்றவை மக்களிடையே பிரபலமானவை. வெரிஃபிகேஷனுக்காக உங்கள் மொபைல் எண்ணை உங்கள் பேங்க் அக்கவுன்ட்டில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பதை முதலில் நினைவில் கொள்க.
தேர்ந்தெடுக்கப்பட்ட யுபிஐ ஆப்ஸை நீங்கள் டவுன்லோட் செய்தவுடன், கொடுக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து உங்கள் பேங்க்கைத் தேர்வு செய்ய வேண்டும். இது உங்கள் பேங்க் அக்கவுன்ட் என்பதை சரிபார்க்க, உங்கள் பேங்க் உங்களுக்கு ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) அனுப்பும். OTP சரிபார்க்கப்பட்டதும், உங்கள் மெய்நிகர் கட்டண முகவரி (Virtual Payment Address (VPA) உருவாக்கப்படும். UPI இரண்டு பேங்க் அக்கவுன்ட்களுக்கும் இடையில் உடனடியாகப் பணப் பரிவர்த்தனையை அனுமதிக்கிறது.
மேலும் இந்த UPI ஆனது ஏற்கனவே உள்ள IMPS உள்கட்டமைப்பின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே இதை 24 மணி நேரமும் உடனடியாகப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.
UPI வழியாக பணத்தை மாற்ற மூன்று வழிகள் உள்ளன - ரிசீவரின் மெய்நிகர் கட்டண முகவரி (VPA), அக்கவுன்ட் எண் மற்றும் IFSC குறியீடு அல்லது QR குறியீட்டை உள்ளிடுவதன் மூலம் பணத்தை எளிதாக நீங்கள் ட்ரான்ஸ்பர் செய்யலாம். UPI ல் இரண்டடுக்குப் பாதுகாப்பு முறை (2FA) பயன்படுத்தப்படுகிறது. அதாவது நீங்கள் ஒரு ATMல் பணம் எடுக்கிறபோது உங்கள் ATM கார்டு முதல் காரணியாகவும் உங்களின் பாஸ்வேர்ட் இரண்டாவது காரணியாகவும் கொள்ளப்படுகிறது. அதே போல இதில் NCPI ஆப் BHIM மூலம் UPI குறியீடும் பேங்க் மூலம் MPIN குறியீடும் தரப்படுகிறது.
NPCI வலைத்தளத்தின்படி, தற்போது, யுபிஐ பரிவர்த்தனைக்கு வரம்பு ஒரு கணக்கிற்கு ஒரு நாளைக்கு ரூ. 1 லட்சம் ஆகும்.