GPS என்றால் என்ன?

நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற Google Map ,  OLA, UBER , Security Devices, Driverless car ஆகியவை அனைத்துமே GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே செயல்படுகிறது.


GPS என்பதன் ஆங்கில விளக்கம் Global positioning system. அதாவது பூமியில் நாம் எங்கு இருக்கின்றோம் என்பதனை அறிந்துகொள்வதற்கு உதவுகின்ற தொழில்நுட்பம் . இந்த GPS வசதியினை கொண்டுதான் நாம் கூகுளின் மேப் உள்ளிட்டவற்றினை பயன்படுத்துகின்றோம் .

GPS தொழில்நுட்பமானது மூன்று முக்கிய பகுதிகளை கொண்டு இயங்குகிறது .

1.செயற்கைக்கோள்கள்

2.பூமியில் இருக்கும் நிலையங்கள்

3.மொபைல் உள்ளிட்டவற்றில் இருக்கக்கூடிய GPS கருவி

உங்களது இருப்பிடத்தை துல்லியமாக அறிந்துகொள்ள 30 செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி விண்வெளியில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.  நீங்கள் பூமியின் எந்தப்பகுதியில் இருந்தாலும் உங்களை குறைந்தபட்சம் 3 செயற்கைகோள்களாவது கண்காணிக்கும் விதமாக குறிப்பிட்ட இடைவெளியில் அவை பூமியை சுற்றிலும் நிறுத்தப்பட்டு இருகின்றன.

இப்போது நீங்கள் GPS தொழில்நுட்பத்தினை பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் , விண்வெளியில் இருக்கின்ற செயற்கைகோள்கள் உங்களது GPS கருவியினை எங்கு இருகின்றது என கண்காணிக்கும் .குறைந்தபட்சம் மூன்று செயற்கைகோள்களின் தரவுகள் ஒன்றிணைக்கப்பட்டு மிகவும் துல்லியமாக நீங்கள் இருக்கின்ற இடத்தின்  தகவலை உங்களுக்கு அனுப்பிடும் . பூமியில் இருக்கின்ற Base Station இன் வேலை செயற்கைக்கோள் அந்த குறிபிட்ட நேரத்தில் அந்த குறிப்பிட்ட இடத்தில்தான் விண்வெளியில் இருக்கின்றதா என்பதனை சரிபார்த்துக்கொள்வதே.


GPS கருவி செயற்கைக்கோள்கள் உதவியுடன்தான் இயங்குகின்றன என்றாலும் எப்படி துல்லியமாக இருக்கின்றது என்பது மிகப்பெரிய கேள்விதான் .

 துல்லியதன்மையை அதிகரிக்கத்தான் பூமியின் எந்தப்பகுதியில் இருந்தாலும் குறைந்தபட்சம் மூன்று செயற்கைகோள்களின் பார்வையாவது படும்வண்ணமாக விண்வெளியில் 30 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் துல்லியத்தன்மையை அதிகரிக்க Atomic clocks செயற்கைகோள்களில் பயன்படுத்தப்படுகின்றன . பூமியில் இருக்கக்கூடிய நிலையத்தின் நேரத்திற்கும் செயற்கைகோளின் நேரத்திற்கும் இடையில் இருக்கக்கூடிய தொடர்பு என்பது மிகவும் முக்கியம் .