நண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


நண்டுகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. கடல் நீரில் இருக்கும் உயிரினங்களில் 20 சதவீத இடத்தை நண்டு இனங்கள் வகிக்கின்றன. கடல் நண்டுகளை விட நன்னீர் ஆற்று நண்டு, கழனிகளில் வாழும் நண்டு தான் மிகுந்த சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளன. பொதுவாக நண்டுகளை வாங்கி உண்பவர்கள் அமாவாசைகளில் வாங்குவது நல்லது என்று கூறப்படுகிறது. ஏனெனில் பௌர்ணமியில் தான் நண்டுகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. எனவே அமாவாசையில் நண்டுகள் வாங்கினால் அதிக சதைபற்றுடன் மிகுந்த சுவையுடன் இருக்குமாம். வயல்வெளிகளில் வாழும் நண்டுகள் மருத்துவத்திற்கு பெருமளவு பயன்படுகின்றது.

மருத்துவத்தில் மேற்கொள்ளபடும் அறுவை சிகிச்சையில் தையல் போட பயன்படுத்தபடும் கருப்பு நிற ‘கைட்டின்’ எனப்படும் நூல் போன்ற ஒரு பொருள் இந்த நண்டுகளின் ஓட்டில் இருக்கும் பசையில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது.

இன்றளவும் வட மாநிலங்களில் கை வைத்தியமாக இந்த நண்டுகளை மிளகுடன் ரசம் வைத்து கொடுக்கின்றனர். இதனால் நெஞ்சுசளி, ஒற்றைத்தலைவலி, காய்ச்சல், தாம்பத்தியத்தில் நாட்டமின்மை போன்ற பிரச்சனைகள் தீரும்.

நண்டில் விட்டமின் சி, பி, தாமிரம், கந்தகம், மக்னீசியம், புரதம், பாஸ்பரஸ், மாவுச்சத்து, கால்சியம், அயோடின் போன்றவை அதிகமாக காணப்படுகின்றன.

செலினியம் மற்ற ஆன்-ஆக்ஸிடண்ட்டுகளோடு சேர்ந்து, விஷத்தன்மையுள்ள அழுத்தத்தைத் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும் செலினியம் உடலில் குறைவாக இருந்தால், அது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, கடுமையான வலியையும் ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே செலினியம் நிறைந்த நண்டை சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதத்தில் இருந்து விடுபடலாம்.


நண்டில் உள்ள புரோட்டீன் ஒருவரின் வளர்ச்சிக்கும், எலும்புகளுக்கும் மிகவும் இன்றிமையாதது. எனவே குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் நண்டு சாப்பிட்டால், முடி, நகம், சருமம் போன்றவையும் ஆரோக்கியமாக இருக்கும்.

காப்பர் மற்றும் ஜிங்க் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இவை இரண்டும் தான் உடலானது வைட்டமின் டி-யை உறிஞ்சி, அதனால் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்ச உதவும்.

பருக்கள் இருந்தால், நண்டுகளை சாப்பிடுங்கள். ஏனெனில் நண்டில் உள்ள ஜிங்க் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும். இதனால் முகப்பருக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

நண்டில் கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளது. ஆனால் அதே சமயம் அதில் நியாசினும் அதிகமாக உள்ளுது. இந்த வைட்டமின் பி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைடு அளவை குறைக்கும்.

கர்ப்பிணிகள் நண்டு சாப்பிடக்கூடாது. ஆனால் கருத்தரிக்க நினைக்கும் பெண்களுக்கு ஃபோலேட் மிகவும் இன்றியமையாதது. இந்த சத்து காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்தாலும், நண்டில் அதிகமாகவே உள்ளது. எனவே இதனை கருத்தரிக்க நினைக்கும் போது அவ்வப்போது எடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நல்லது.