நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்

இன்றைய நவீன வாழ்க்கையில் விஞ்ஞானமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் நம்மை முன்னேற்றத்துக்குக் கொண்டுசென்றுள்ளன. அதேநேரத்தில், நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்ததாகத் தெரியவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. இதற்கு உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை, சுற்றுச்சூழல் பாதிப்பு என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமாக மருத்துவர்கள் முன்வைக்கும் காரணங்களில் ஒன்று நோய் எதிர்ப்புச் சக்தி. 




ஒரு மனிதனை நோய் அண்டாமல் இருக்க வேண்டும் என்றால் அவனுடைய நோயெதிப்பு மண்டலம் வலுவாக இருக்க வேண்டும். நோயெதிப்பு மண்டலம் என்பது இரத்த அணுக்கள், நோயெதிப்பு செல்கள் மற்றும் உறுப்புகளின் சிக்கலான அமைப்பாகும். 

தண்ணீர் உடலின் கழிவுகளை வெளியேற்றி, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. மேலும் உடல் வெப்பத்தை சீராகப் பராமரிக்கிறது. மெட்டபாலிசத்தை அதிகரித்து, எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

தயிர் உள்ளிட்ட பால் பொருள்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு 'ப்ரோபயாட்டிக்' என்று பெயர். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்சைமான இம்யுனோகுளோபுலின் (Immunoglobulin) அதிகளவு சுரக்க உதவுகிறது. மேலும், இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய்த் தொற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதனால் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

தூக்கம் இல்லாமல் இருப்பதும் உங்க உடல்நலத்தை பாதிப்படைய செய்யும். உங்களுக்கு இருக்கும் தூக்கமின்மை பிரச்சனை உங்க உடம்பில் உற்பத்தியாகும் வெள்ளை அணுக்கள் உற்பத்தியை அழிக்கிறது. இதனால் உங்க நோயெதிப்பு மண்டலம் பலவீனம் அடைய அதிக வாய்ப்புள்ளது

ஆரோக்கியமான உணவு மட்டுமே ஆரோக்கியமான நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே உங்களுக்கு பலவீனமான நோயெதிப்பு அமைப்பு இருந்தால் உங்க உணவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த ஆரோக்கியமான உணவு உங்களுக்கு ஊட்டச்சத்துக்களையும் , ஆன்டி ஆக்ஸிடன்கள் தன்மைகளையும் வழங்கும்









வைட்டமின் சி நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், முட்டைகோஸ், ப்ரக்கோலி போன்ற காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தவும் மேம்படுததவும் உதவும்.

வாரத்தில் குறைந்தது இரண்டு நாள்களாவது கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதில் அதிகளவில் வைட்டமின்கள், இரும்புச்சத்து உள்ளிட்ட அத்தியாவசியச் சத்துகள் நிறைவாக உள்ளன. இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும்.

மஞ்சள் ஒரு இயற்கையான ஆன்டிபயாட்டிக் என்பதால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிரிக்க உதவும். ரத்தத்தைச் சுத்தகரிக்கும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களில் இருந்து காக்கும்.

பாதாம் பருப்பு போன்ற நட்ஸ் வகை உணவுகளில் மாங்கனீஸ் (manganese), வைட்டமின் ஈ சத்துகள் நோய் எதிர்ப்புச் சக்திக்குக் காரணமான வெள்ளை அணுக்களின் செயல்பாட்டைத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. 

தினசரி உடற்பயிற்சி உங்க உடம்பை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைக்க உதவுகிறது. மன அழுத்தத்தை கொடுக்கும் கார்டிசோல் ஹார்மோன் அளவை குறைத்து எண்டோர்பின் என்ற மகிழ்ச்சி ஹார்மோனை தூண்டுகிறது. இதனால் மன அழுத்தம் நீங்கும். உங்க நோயெதிப்பு மண்டலம் வலுப்படும்.