உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கான வழிகள்

 உலகம் முழுக்க மக்கள் இந்த உடல் உஷ்ண பிரச்சனையை எதிர்கொள்ளவே செய்கிறார்கள். உடல் வெப்பநிலை என்பது சீராக இருக்கும் வரை உடலில் பாதிப்பு நேராது.உடல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு இல்லாமல் அதிக வெப்பத்தை கொண்டிருப்பதே உடல் உஷ்ணம் என்கிறார்கள். உடலின் வெப்பநிலை 36.5 முதல் 37.5 டிகிரி செல்சியஸ் வரம்புகளுக்கு இடையில் உள்ளது.


உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது உடலில் உஷ்ணம், கண்களில் எரிச்சல், வயிற்றில் அசெளகரியம், புண்கள், அமிலத்தன்மை அதிகரிப்பது, வாயு போன்ற செரிமான பிரச்சனைகளை உண்டாக்க கூடும்.

இரவு படுக்கச் செல்லும் போது, உள்ளங்காலில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்துவிட்டு படுப்பது உடல் சூட்டை தணிக்கும்.

உண்மை உள்ளங்கால்களை குளிர்ந்த நீரில் நனைப்பதால் உடல் குளிர்ந்துவிடுமா என்று கேட்கலாம். ஆனால் உண்மையில் இது நல்ல பலன் கொடுக்கும். அகலமான பாத்திரத்தில் மிதமான நீர் விட்டு (தேவையெனில் ஐஸ் க்யூப் சிலதும் சேர்க்கலாம்) இதில் இரண்டு கால்களையும் சேர்த்து அரை மணி நேரம் வரை மூழ்க வைக்கவும்.

உடலை குளிர்விக்கும் ஆற்றல் தண்ணீருக்கு உள்ளது. உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்க இவை உதவும் என்பதால் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும் போது 20 நிமிடங்கள் வரை உங்கள் கால்களை நீரில் நனைத்து வைக்கவும்.

இளநீருக்கே உரித்தான குளிர்ச்சி உடலுக்கு கிடைக்கும். இளநீர் உடலுக்கு உடனடி ஆற்றல் பானமாக உள்ளது. இது புத்துணர்ச்சி தரும் பானமாக செயல்படுகிறது. இளநீரில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோஒலைட்டுகள் வெப்பநிலையை மாற்றி உஷ்ணத்தை தணிக்கும். இளநீர் குடிப்பது இரண்டு விதமான நன்மைகளை உடலுக்கு அளிக்கும். இது உடலுக்கு உண்டான நீரிழிப்பை தடுக்கும். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.


நெல்லிக்காய் குளிர்ச்சியை தரக்கூடியது. எனவே கோடை காலங்களில் தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது.

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, உடற் சூட்டை குறைக்க மிகச்சிறந்த வழியாகும். நல்லெண்ணெய் இல்லாவிட்டாலும், தினமும் தேங்காய் எண்ணையை தலையில் தேய்த்து குளிப்பது நல்லது.

தயிரை விட மோர் உடற்சூட்டை குறைப்பதில் சிறப்பாக செயல்படும். எனவே மதிய உணவில் மோரை சேர்த்துக் கொள்வது அவசியம்.

வெளியில் விலை அதிகமுள்ள நீர்ச்சத்து மிக்க உணவுகள் தேவை என்றில்லை. முள்ளங்கி, புடலங்காய், வெள்ளாரிக்காய்,செள செள,காலிஃப்ளவர், முட்டை கோஸ், நூக்கல் என காய்கறிகள் பழங்களில் தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி போன்றவை அதிகமாக சேர்க்கலாம். இதை அதிக காரம் சேர்க்காமல் ஆவியில் வேகவைத்து சாப்பிடலாம். அல்லது ( அப்படியே சாப்பிட கூடிய ) பச்சையாக சாலட் போன்றும் சாப்பிடலாம். தயிரோடு சேர்த்தும் 


சருமத்துவாரங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் உடல் உஷ்ணத்தை குறைக்க செய்யலாம். உடல் உஷ்ணம் உண்டாகும் போது உள்ளுக்கு போலவே சருமத்தின் மேற்பரப்பிலும் குளிர்ச்சியை அனுபவிக்கலாம். அதனால் சருமத்தின் மீது கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம். அதே போன்று அசல் சந்தனத்தையும் சருமத்தின் மீது பயன்படுத்தலாம். ஆயுர்வேத முறைப்படி சந்தனத்தை உடலுக்கு குளிர்ச்சி தர பயன்படுத்தலாம். சாப்பிடலாம்.

உடல் வெப்பத்தை தணிக்கும் பழங்களில் முலாம் பழம் மிகவும் முக்கியமானது. இந்த பழம் மிகவும் குளிர்ச்சி தன்மை நிறைந்தது. இதனை ஒர நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், சிலருக்கு அதில் உள்ள குளிர்ச்சியால் காய்ச்சல், இருமல் போன்றவை ஏற்படும்.

மிகவும் பிரபலமான இயற்கை வைத்தியம் என்றால், அது தினமும் வெந்தயத்தை சாப்பிடுவது தான். இதனால் உடல் வெப்பமானது எளிதில் தணியும்.