கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், இந்தியாவின் மாற்று மருத்துவ முறைகளில் ஒன்றான சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் ஒரு மருந்தாக முன்வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல இடங்களில் இந்த மருந்தை வாங்க மக்கள் கடைகளில் குவிந்தனர்.
சித்த மருத்துவத்தில் re - purposing செய்வதற்கு நிமோனியா போன்ற பழைய நோய்களுக்கு பயன்படுத்தப்பட்ட கபசுர குடிநீர் என்பதுதான் சரியான மருந்தாக இருந்தது. இந்த மருந்தில் 15 மூலிகைகள் இருக்கின்றன.
கபம் என்றால் சளி, சுரம் என்றால் காய்ச்சல், அதாவது சளி, காய்ச்சலை அகற்றுவதுதான் கபசுரம். ஆடாதோடா இலை, கற்பூரவல்லி, சுக்கு, மிளகு உள்பட 18 வகையான மூலிகை பொருட்களை கலந்து செய்ததுதான் கபசுர குடிநீர். இதில் நிலவேம்பு கசாயமும் சேர்க்கப்பட்டு உள்ளது.
பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகியவை வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. இதனால் பலர் இந்த கசாயத்தை வாங்கி குடித்தனர். தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கபசுர குடிநீர் பல இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. அரசு சார்பிலும் இந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கபசுர குடிநீரை குடிக்கும்போது, சளி இருந்தால் அதை எளிதாக அகற்றி விடும். அதுபோன்று நுரையீரலில் உள்ள அணுக்களின் அளவை அதிகரித்து எளிதாக சுவாசிக்கக்கூடிய பலனையும் கொடுக்கிறது.
காலையில் குடிக்கும்போது சாப்பிட்டுவிட்டு குடிக்கக்கூடாது. வெறும் வயிற்றில் குடித்தால்தான் உடலில் உள்ள சளி குறையும். எனவே இந்த நடைமுறையை பின்பற்றி கபசுர குடிநீரை குடித்தால் நல்லது.
குழந்தைகளுக்கு 15 மில்லி லிட்டர் கஷாயத்தில் தேன் கலந்து ஒரு ஸ்பூன் தினமும் கொடுத்து வந்தால் காய்ச்சல் குணமாகும். பெரியவர்கள் ஒருவேளைக்கு 30 மில்லி குடிக்கலாம். கர்ப்பிணிகள் கபசுரக் குடிநீரைத் தவிர்ப்பது நல்லது.
மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கபசுரக் குடிநீர் பெரும்பங்காற்றும் எனவும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.