பப்பாளி-விலையோ குறைவு நன்மைகளோ ஏராளம்!

 

கர்ப்பிணிப் பெண்கள் தவிர அனைவரும் சப்பிட ஏற்ற பழம் பப்பாளி.மேலைநாடுகளை சார்ந்தவர்கள் பாரத நாட்டிற்கு வியாபாரத்திற்காக வர தொடங்கிய காலத்தில், அவ்வியாபாரிகள் மூலமாக இங்கிருந்த விளை பொருட்கள் பல உலகின் பல நாடுகளுக்கும் சென்றது. அதே போல் உலகின் மற்ற நாடுகளிலிருந்து பல விளை பொருட்கள் பாரதத்திற்கு அறிமுகமாயின. அப்படியான ஒரு விளை பொருள் தான் பப்பாளி.பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சக்தி உள்ளது. உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்க வேண்டுமானால், பப்பாளி பழத்தை உண்ணுங்கள்.


பப்பாளியில் போலிக் அமிலம் வடிவில் வைட்டமின் பி, வைட்டமின் பி-6 மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை அடங்கியுள்ளது.100 gm பப்பாளியில் 43 கலோரிகள் மட்டுமே உள்ளன. மஞ்சள் நிற பழங்களில் காணப்படும் கரோட்டின் சத்து இப்பழத்தில் அதிகம் காணப்படுகிறது. இப்போது பப்பாளியின் நன்மைகளை பற்றி பார்ப்போம்.

நன்மைகள்

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும். பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.



குழந்தைகளுக்கு பப்பாளி பழத்தை உண்ண கொடுப்பதால் அவர்களின் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகும். கண் பார்வை கோளாறு குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நரம்பு தளர்ச்சி பிரச்னையை போக்க தினமும் காலையில் நன்கு பழுத்த பப்பாளி பழத்தை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறைபாடு சீக்கிரத்திலேயே நீங்கும்.


இன்றைய காலத்தில் தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால் பல ஆண்களுக்கு அவர்களின் விந்தணுக்கள் குறைத்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்ற வாய்ப்புகள் அதிகமாகின்றன.பப்பாளி சாப்பிட்டு வந்தால் ஆண்களின் உயிரணு உற்பத்தி திறனை அதிகரிக்கும்.

சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்வதில் பப்பாளிப்பழம் சிறப்பாக செயல்படுகிறது.


ஒரு மனிதனின் வயிறு ஆரோக்கியமாக இருந்தாலே பல நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். தினமும் காலையில் சிறிது ஒரு பப்பாளி பழ துண்டுகளை சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படாது.

உடல் எடை அதிகரித்து காணப்படுபவர் பப்பாளி பழத்தை காலை உணவாக சாப்பிட்டு வந்தால் விரைவில் எடை குறையும்.

இன்று பலரையும் பாதிக்கும் நோயாக நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி இருக்கிறது. பப்பாளி சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு குறைபாட்டை குணமாக்குவதில் சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு பழமாகும்.


பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் உதிரப்போக்கு ஒரு இயற்கையான நிகழ்வாகும். ஆனால் சில பெண்களுக்கு இந்த மாதவிடாய் காலத்தில் ரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு உடலிலிருக்கும் சத்துகள் மற்றும் பலம் குறைகின்றது. மாதவிடாய் தினங்கள் கழிந்த பின்பு பப்பாளி பழங்கள் சாப்பிட்டு வந்தால் பெண்கள் இழந்த சத்துகளை மீண்டும் பெற முடியும்.