உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டி என்றால் அது ஒலிம்பிக் தான். இன்று மிகப் பிரம்மாண்டமாகவும் அதிக நாடுகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டியாவும் இருக்கும் ஒலிம்பிக் போட்டியின் வயது சுமார் 2,800 ஆண்டுகள்!ஒலிம்பிக் போட்டிகள் 1896ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ சின்னம் 1913ம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பெய்ரே டி கௌபெர்டின் தான் ஒலிம்பிக் சின்னத்தை உருவாக்கியவர். ஆனால் அந்த சின்னம் 1920ம் ஆண்டு தான் நடைமுறைக்கு வந்தது.கடந்த 1948 முதல் சர்வதேச ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதே நாளில் கடந்த 1894இல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பழங்காலத்தில் ஒலிம்பிக் போட்டியை ஒரு விளையாட்டு திருவிழாவாக கருதி கொண்டாடியுள்ளனர் கிரீஸ் நாட்டு மக்கள். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பியா என்கிற இடத்தில் ஜீயஸ் கடவுளுக்கு மரியாதை செய்யும் விதத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. இசை, சொற்பொழிவு, நாடகம் போன்றவற்றிலும் போட்டிகள் நடைபெற்றன. ஆண்கள் மட்டுமே போட்டிகளில் அனுமதிக்கப்பட்டனர்.18ஆம் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம், ஓட்டம், ஈட்டி எறிதல், குதித்தல் போன்ற விளையாட்டுகள் சேர்க்கப்பட்டன. 20ஆம் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை சேர்க்கப்பட்டது. இப்படியாக தூவப்பட்ட விதை இன்று விருட்சமாக ‘மாடர்ன் டே’ ஒலிம்பிக் விளையாட்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. பங்கேற்பாளர்களும் பார்வையாளர்களும் அதிகமானார்கள். நாடுகளிடையே பதக்கம் பெறுவதில் போட்டிகளும் அதிகரித்தன.இதுவரை 32 முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
‘போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமல்ல; எப்படிப் போராடுகிறோம்
என்பதே முக்கியம்’ என்கிற நோக்கத்தை முன்வைத்து, கூபெர்டின் முயற்சியில் 1896ஆம் ஆண்டு நவீன ஒலிம்பிக் போட்டி, கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் ஆரம்பமானது. 1900ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பெண்களும் அனுமதிக்கப்பட்டனர். 1924ஆம் ஆண்டு முதல் பனிப்பகுதியில் விளையாடக்கூடிய விளையாட்டுகளுக்காக ‘குளிர்கால ஒலிம்பிக்’ போட்டிகள் நடத்தப் படுகின்றன.இந்தியா கடந்த 1900ம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறது. இதுவரை 9 தங்கம், 8 வெள்ளி, 12 வெண்கலம் என 28 ஒலிம்பிக் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. 2000க்கு பிறகு இந்தியா ஒரே ஒரு தங்கம்தான் வென்றுள்ளது. அதை வென்றவர் அபினவ் பிந்த்ரா.
1968ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த டோம்மி ஸ்மித் தங்கமும் ஜான் கேர்லோஸ் வெண்கலமும் வென்றனர். ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் வீரர்களின் புகழை வணிக நிறுவனங்கள் பயன்படுத்த ஆரம்பித்தன. வெற்றி பெறும் வீரர்களுக்கு இதன்மூலம் அதிக வருமானமும் புகழும் கிடைக்கின்றன.
ஒலிம்பிக் போட்டிக்கான சின்னம் 5 வளையங்கள் ஒன்றோடு ஒன்று பின்னி இருப்பது போன்று உருவாக்கப்பட்டிருக்கும். அந்த 5 வலையளங்களும் அமெரிக்க, ஆஃப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஓசியானா ஆகிய 5 கண்டங்களை குறிக்கிறது.ஒலிம்பிக் சின்னத்தின் 5 வளையளங்களும் 5 வெவ்வேறு நிறங்களில் உருவாக்கப்பட்டிருக்கும் (நீளம், மஞ்சள், கருப்பு, பச்சை, சிகப்பு).5 வலையளங்களுக்கு பொதுவாக வெள்ளை நிற ‘பேக் ரவுண்ட்' கொடுக்கப்பட்டிருக்கும். எனவே உலகின் அனைத்து நாடுகளின் தேசிய கொடியிலும், ஒலிம்பிக் சின்னத்தில் உள்ள 6 நிறங்களில் ஏதாவது ஒன்று இடம்பெற்றிருக்கும் என நம்பப்படுகிறது.