பார்லி என்கிற பொருளே உங்களில் பலருக்கு நினைவில் இருக்குமா என்பது தெரியவில்லை. முன்பெல்லாம் உடம்பு சரியில்லாத போது கஞ்சி வைத்துக் கொடுக்கவாவது உபயோகத்தில் இருந்த பார்லி, இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால், அப்படி மறந்து ஒதுக்க முடியாத அளவுக்கு மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு பொருள் பார்லி
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்றாக விளங்குவது பார்லி, இந்த பார்லி (barley benefits) டயட்டில் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என்று அனைவரும் தினமும் சாப்பிட்டு வரலாம்.
தினமும் பார்லியை உட்கொண்டு வந்தால் உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்கலாம். மேலும் இந்த பார்லி இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொழுப்பை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் இந்த பார்லி அரிசி கஞ்சி சிறுநீரகத்தின் செயலாற்றலை ஊக்குவிக்கிறது.
அதேபோல் செரிமான கோளாறுகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது. எனவே தினமும் பார்லி கஞ்சி (barley drink) உட்கொள்வதால் உடலில் ஆரோக்கிய சக்திகளை அதிகரிக்கலாம், உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தவிர்த்து கொள்ளலாம், முக்கியமாக உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.
இயற்கையாகவே பார்லியில் (barley benefits) இருக்கும் ஊட்டச்சத்துக்கள் புற்று நோய்களை எதிர்த்து போராடும் தன்மை உடையது. எனவே தினமும் பார்லி அரிசி கஞ்சி (barley drink) சாப்பிட்டு வர மார்பக மற்றும் ஹார்மோன் புற்றுநோய்கள் வராமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது .
- தாதுக்கள் , வைட்டமின்கள் மற்றும் கால்சியம் நிறைந்த பார்லி கருவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றுகிறது.
- பார்லியில் உள்ள நியாசின் பிரசவத்தின் போது ரத்தம் உறைவதற்கு வழிவகுக்கிறது.
- பார்லி ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் கட்டுபடுத்தி கர்ப்பகால நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.
பார்லியில் (barley benefits) அதிகளவு நார்ச்சத்து உள்ளது. எனவே தினமும் பார்லி அரிசி கஞ்சி அருந்தி வர இரத்த கொழுப்பை குறைக்கவும், செரிமானத்தை ஊக்குவிக்கவும் செய்கிறது, இதனால் உடல் எடையை குறைக்கவும் பார்லி பெரிதும் உதவுகிறது.
தினமும் அன்றாட உணவில் பார்லியை சேர்த்து கொள்வதினால் பித்தப்பையில் கற்கள் சேராமல் உடல் நலத்தை பாதுகாக்க முடியும்.
பார்லியில் உள்ள புரதம் பித்தப்பையில் உள்ள கற்களை கரைக்கும் தன்மை கொண்டது.
எனவே பித்தப்பையில் கற்கள் வராமல் இருக்க தினமும் பார்லி அரிசி கஞ்சி (barley drink) உணவாக சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
இதய நோயாளிகளுக்கு பார்லி அற்பு தமான ஒரு உணவு. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதால், இது இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பார்லியில் உள்ள கரையாத நார்ச்சத்தில் ப்ரோபியானிக் என்கிற அமிலம் இருக்கிறது. அது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. அதனால்தான் இதய நோயாளிகளுக்கு பார்லி நல்லது.
பார்லியில் பீட்டா க்ளூக்கோன் அதிகம். அதுவும் கொலஸ்ட்ராலை குறைக்கவல்லது. இந்த பீட்டா க்ளூக்கோனானது, பித்த நீருடன் சேர்ந்து, கொழுப்பை மலத்தின் வழியே வெளியேற்றி விடும். உடலிலுள்ள நச்சு நீரை வெளியேற்ற வல்லதால், எடைக் குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும் பார்லி சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
பார்லி தண்ணீரை அளவுக்கு மீறி குடித்தால் பக்க விளைவுகள் ஏற்படும்.
- பார்லியை உட்கொள்ளுவது சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. பார்லி உட்கொண்டதால் ஒவ்வாமைக்கு உள்ளானவர்கள் அரிப்பு , தடிப்புகள் மற்றும் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டதாக சொல்கிறார்கள்.
- பார்லி தண்ணீரை ஒரு நாளில் 6 டம்ளருக்கு மேல் குடித்தால் பிறக்கும் குழந்தை குறைபாடுகளுடன் பிறக்கும் . சில சமயங்களில் கர்ப்பம் கலைந்து விடவும் வாய்ப்புண்டு.
- பார்லி தூசு கண்ணில் பட்டால் கண்வலி ஏற்படும் , மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கும் அல்லது சைனஸ் தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது.
- பூஞ்சை பாதிக்கப்பட்ட பார்லியை சாப்பிட்டால் எழும்பு நோய் உண்டாகும்.
- உங்களுக்கு பசையம் (gluten) ஒவ்வாமை இருந்தால் பார்லியை தவிர்த்து விடவும்.ஏனெனில் பார்லியில் பசையம் நிறைய இருக்கிறது.
- பார்லி தண்ணீரை அதிகம் குடித்தால் மலக்குடல் இரத்தப்போக்கு ஏற்படும்.