வினையைத் தீர்க்க
விநாயகருக்கு படைக்கும் அருகம்புல் முன்ஜென்ம வினைகளை மட்டும் அல்ல, உடலின் வினைகளையும் தீர்க்கும்.
இயற்கையாக கிடைக்கும்
மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தும் முறைகளை சித்தர்கள் கூறியுள்ளனர்
நாம் உண்பதற்கு எண்ணற்ற காய்கறிகளும், பழங்களும் உள்ளன. அவற்றில் சிலவற்றை
பச்சையாகவும், சிலவற்றை ஜூஸ் எனப்படும் சாறு பிழிந்தும் சாப்பிடுகிறோம். அப்படி
ஜூஸ் போட்டு அருந்தும் ஒரு அற்புதமான மூலிகை புல் தான் அருகம்புல். இந்த அருகம்புல்
ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.
நாம் உண்ணும் உணவு, அருந்தும் நீர் சுவாசிக்கும் காற்று
என அனைத்தும் இக்காலத்தில் நச்சுத்தன்மை நிறைந்ததாக இருக்கிறது. அருகம்புல் ஜூஸ் தினந்தோறும்
காலை அருந்துபவர்களுக்கு உடலில் தங்கியிருக்கும் அதனை நச்சுக்களும் வியர்வை, சிறுநீர் மூலமாக வெளியேறும்.
தற்போது இயற்கை சத்துபானங்கள் என்று விற்பனை செய்யும் பல சாலையோர
கடைகளில் அருகம்புல் ஜூஸ் நிச்சயம் இடம்பிடித்துள்ளது. இவை தற்காலிகமாக கண்டறியப்பட்ட
இயற்கை பானம் அல்ல. மூதாதையர்கள் காலம் முதலே இதை அருந்திவந்தார்கள். தினமும் காலை
வேளையில் காய்சாத ஆட்டு பாலில் அருகம்புல் சாறை கலந்து ஒரு மண்டலம் வரை பயன்படுத்தினால்
நரம்பு தளர்ச்சி பிரச்சனை இருந்தால் அவை குணமடையும். இதை இன்றும் கிராமங்களில் கடைபிடித்துவருகிறார்கள்.
அதிக காரம், மசாலா நிறைந்த உணவுகளால் வயிற்றை புண்ணாக்கி வைத்திருக்கும்
பலருக்கும் அல்சர் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. இதன் ஆரம்ப அறிகுறியாக வயிற்றிலும்
வாயிலும் புண் உண்டாகும் போதே அருகம்புல் சாற்றின் மூலம் அதை சரிசெய்யலாம். தினமும்
காலை அரை டம்ளர் அருகம்புல் சாறை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுபுண்
காணாமல் போகும்.
உடலில் இன்சுலின் குறைபாட்டால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
சர்க்கரை சத்துக்கள் குறைவாக கொண்ட உணவுகளை உண்ண வேண்டும். இவர்கள் தினந்தோறும் அருகம்புல்
ஜூஸ் அருந்துவது இவர்களின் உடல்நலத்திற்கு நல்லது.
குறைவான நீரை அருந்துபவர்களுக்கும், சிறுநீரகத்தில் கற்கள் தோன்றியிருப்பவர்களுக்கும் சிறுநீர் பிரிவதில்
பிரச்சனை இருக்கும். அருகம்புல் ஜூஸ் அருந்த சிறுநீரகங்களில் கற்கள் உண்டாவதை தடுத்து
சிறுநீரை பெருக்கும்.
சிலருக்கு வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் சமச்சீரற்ற தன்மையால் சாப்பிடும்
உணவுகள் சரியாக செரிமானம் ஆகாமல் அஜீரணம், வாயுத்தொந்தரவுகள் ஏற்படும். இக்குறைபாட்டை போக்க ஒரு நாளைக்கு
ஒருமுறை அருகம்புல் ஜூஸ் அருந்த வேண்டும்.
சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகம் ரத்தபோக்கு ஏற்படும். அது போல சிலருக்கு
என்ன காரணத்தினாலோ மூக்கிலிருந்து ரத்தம் வடியும். இப்படிப்பட்டவர்கள் அருகம்புல் ஜூஸ்
அருந்துவதால் இக்குறைபாடுகள் நீங்கும்.
ஒரு சிலருக்கு எவ்வளவு உணவை உண்டாலும் பசி அடங்காமல் இருக்கும். மேலும் அதிகமான
உணவுகளை சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் தினந்தோறும் அருகம்புல் ஜூஸ் அருந்தினால்
அதீத பசியை கட்டுப்படுத்தும்.
அருகம் புல்லில் எலும்புகளின் உறுதிக்கு தேவையான மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துகள் நிறைந்து இருக்கின்றன.
அருகம் புல் ஜூஸ் தினந்தோறும் காலையில் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் உறுதியாக
இருக்கும்.
ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்றவை நுரையீரல் சம்பந்தமான வியாதிகள் ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள்
காற்றை சுவாசிக்கும் போது துன்புறுவர். இவர்கள் அருகம்புல் ஜூஸ் அருந்துவதால் நல்ல
நிவாரணம் கிடைக்கும்.
மூளையில் இருக்கும் நரம்புகள் பாதிக்கப்படுவதால் சிலருக்கு முகவாதம், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
அருகம்புல் ஜூஸ் அருந்தி வருபவர்களுக்கு நரம்புகள் வலுப்பெற்று எப்படிப்பட்ட வாத நோய்களும்
ஏற்படாமல் காக்கும்.
இன்றிருக்கும் அவசர வாழ்க்கை முறை மற்றும் கட்டுப்பாடுகளில்லாத உணவு முறைகளால்
பலருக்கும் உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினந்தோறும்
காலை உணவு உண்பதற்கு முன்பு அருகம்புல்ஜூஸ் அருந்தி வந்தால் உடல் பருமன் மற்றும் உடல்
எடை குறையும்.