தைமோகுயினன் அதிகமுள்ள கருஞ்சீரகத்தின் நன்மைகள்


நாம் பாரம்பரியமாக சமையலறையில் பயன்படுத்தப்பட்ட உணவு பொருள்களின் மருத்துவ குணத்தை உலகம் முழுக்க ஆய்வுகளும் உட்படுத்தி அதன் நன்மைகளையும் தெரிவித்திருக்கின்றன. அதில் ஒன்று கருஞ்சீரகம், இந்த மூலிகைத் தாவரம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. கருஞ்சீரகத்தின் அறிவியல் பெயர் நிஜெலா சட்டைவா சமஸ்கிருதத்தில் `கிருஷ்ண ஜீரகா’, `குஞ்சிகா’, `உபகுஞ்சிகா’, `உபகுஞ்சீரகா’ என்றும்,இந்தியில் `காலாஜீரா’, `கலோன்ஜி’ என்றும் சொல்வார்கள்.யுனானி மருத்துவத்தில் கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அரபு நாடுகளில் இதை உணவில் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள்.

வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியாக இருந்தால் உடலில் நோய்களே வராது என்றார்கள் சித்தர் கள். அப்படி உடலில் அதிகமாகும் கபத்தை குறைக்க
கருஞ்சீரகம் பயன்படுகிறது.முக்கியமாக மூலிகை கள் சேர்ந்த கஷாயத்தில் கருஞ்சீரகமும் கண்டிப்பாக இடம்பெறும்.கருஞ்சீரகத்தில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளன. பலவிதமான நோய்களை கட்டுப்படுத்தும் சக்தியும், நோய்களை வரவிடாமல் காக்கும் சக்தியும் கருஞ்சீரகத்திற்கு உண்டு.மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள `தைமோகுயினன்'  என்ற வேதிப்பொருள் வேறு எந்தத் தாவரத்திலும் இல்லை.

கருஞ்சீரகத்தின் நன்மைகள்

சர்க்கரையின் அளவை அதிகரிப்பதை தடுக்கும்

கருஞ்சீரகம் ரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகின்றது.மேலும் கருஞ்சீரகம் கணைய செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. சுருங்கச் சொன்னால் இவர்களுக்குக் கருஞ்சீரகம் ஒரு வரப்பிரசாதமாகும்.

தொடர் இருமலுக்கு நல்லது

தொடர் இருமலால் பாதிக்கப்படுவோர், 1 தேக்கரண்டி கருஞ்சீரக பொடியை தேன், அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட்டால் குணமாகும்; நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.கருஞ்சீரகப் பொடியை   1 கிராம் எடுத்து மோர் கூட கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் விடாமல் வருகிற விக்கல் பிரச்சனை குணமாகும்..


புற்றுநோய்க்கு மருந்து

கருஞ்சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒரு பொருளாகும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படாமல் இருக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் பெரும் பங்கு ஆற்றுகின்றன. கருஞ்சீரகத்தைத் தினமும் உணவில் சேர்த்து அதன் மூலம் உடலில் புற்றுநோய் ஏற்படாமல் விரட்டி அடிக்க முடியும்.கணையப் புற்று நோயை கட்டுப்படுத்துவதில், இது பெரும் பங்கு வகிக்கிறது. கருஞ்சீரகத்தில் 'இன்டெர்பிதான்' என்ற இயற்கை வேதிப்பொருள் உள்ளது. அது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி, புற்றுநோய் கட்டிகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது.

மாதவிடாய் சிக்கலை போக்கும்

கருஞ்சீரகம் வயிற்றிலுள்ள வாயுத்தொல்லைகளை நீக்கும் திறன் கொண்டது.இதை லேசாக வறுத்து வெடிக்க விட்டு தூள் செய்து வைத்துக்கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு, பத்து நாட்கள் முன்பிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, தினமும், இருவேளை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிட வேண்டும். இது மாதவிடாய் சிக்கலை போக்கும். வயிறு கனம் குறைந்து, சிறுநீர் நன்றாக பிரியும்.குழந்தைகளுக்கு வெந்நீரில் ஒரு தேக்கரண்டி அளவு கருஞ்சீரகப் பொடியைக் கலந்து பருக தரலாம். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்வதால் வயிற்றில் உள்ள புழுக்கள் எல்லாம் வெளியேறிவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தி

நாம் உண்ணும் உணவில் இருக்கும் கெட்டக்கொழுப்புகளை கரைத்து உடல்நலத்தை பாதுகாக்கிறது. இது, நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.

குழந்தைப் பேறுக்கு பிறகு வரும் வலி

குழந்தைப்பேறு அடைந்த பெண்களின் கர்ப்பப்பையில் அழுக்குகள் இருக்கக்கூடும். கர்ப்பப்பையைத் தூய்மைப்படுத்தி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிக அவசியம். இதனால் எதிர்காலத்தில் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட தொல்லைகள் வராமல் தடுக்கலாம். இந்த பொடியை தேன் விட்டு அரைத்து பூச, குழந்தை பேறுக்கு பிறகு பெண்களுக்கு வருகிற வலி குணமாகும்.

உடல் பருமன் குறையும்

இயற்கையான வழிகளில் தேவையில்லாத உடல் எடையைக் குறைக்கக் கருஞ்சீரகம் உதவுகின்றது.  தினம் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி அளவு கருஞ்சீரகம் பொடியைக் கலந்து அருந்தலாம். இதன் மூலம் தேவையில்லாத சதை குறையும்.