வயிற்றின் நண்பன் எனப்படும் தேனின் பயன்கள்

 


தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும். இதை உணவில் சேர்க்கும் பொழுது, இயற்கையாக கூடுதல் சுவையை உணவு பெறுகிறது; பிற எந்த ஒரு செயற்கை இனிப்பூட்டிகளும், தேன் வழங்கும் இச்சுவைக்கு நிகராக முடியாது.தேன் உணவாகவும் மருந்தாகவும் பயன்படக்கூடிய பொக்கிஷம்.இதைச் சாப்பிட்ட நான்கு மணி நேரத்தில் முழுமையாக செரிமானமாகிவிடுவதால் உடலில் சேர்ந்து பலத்தைக் கொடுக்கும் என்று சித்த மருத்துவ நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.’வாதம்,பித்தம் மற்றும் கபம் என்ற முக்குற்றங்களையும் தன் நிலையில் வைக்கும் ஒரு அரும்பொருள் தேன்’ என ‘தேரன் பொருள்’ பண்பு நூல் கூறுகிறது. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் இரவில் தூங்கும் முன் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். இதற்கு காரணம் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்பதற்காகத் தான். இயற்கை வைத்தியங்களில் தேன் முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேனை பொதுவாக 'வயிற்றின் நண்பன்' என கூறுவதும் உண்டு

தேனின் பயன்கள்:

 இருமல்


குழந்தைகளுக்கு இரவில் தூக்கத்தைக்

 கெடுக்கும் விதமாக வரக்கூடிய

 இருமலைப் போக்க தேன் நல்ல மருந்து

 என்று உலக சுகாதார நிறுவனம் ஆய்வு

 ஒன்றில் கூறியுள்ளது.கால் டம்ளர்

 வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன்

 தேனைக் கலந்து கொடுத்தால், அது இரவில் வரக்கூடிய இருமலைக்

 கட்டுப்படுத்தும்.தொண்டைகட்டு மாற்று தொண்டை கரகரப்பு போன்ற

பிரச்சனைகளும் நீங்கும்.  தேனை உட்கொள்வது, 2 நாட்களில் சளித்தொந்தரவை

குறைக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இளம் சூடான வெந்நீருடன்

எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை  அருந்தினால், வாந்தி, குமட்டல்,  ஜலதோஷம்,

தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்

உடல் எடை  

தேன் கல்லீரலுக்கு எரிப்பொருள் போன்று செயல்படும் மற்றும் கல்லீரலில் குளூக்கோஸ் உற்பத்திக்கு உதவும்.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் இரவு தூங்க செல்லும் முன்பாக ஒரு டீஸ்பூன் தேன் அருந்தி விட்டு தூங்கும் போது, உடலுக்குள் செல்லும் தேன் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது



நோய் எதிர்ப்பு திறன்

நோய் எதிர்ப்பு சக்தி மட்டும் நமது உடலில் இல்லையென்றால் வீரியமில்லாத சிறு நோய்கள் கூட நமது உடலை பீடித்து மிக கடுமையான பாதிப்புகளை நமக்கு உண்டாக்க கூடும். தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள்,ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும்.இதனால் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் பல்வேறு நோய்களின் தாக்கதல் தடுக்கப்படும். தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் இருந்தால்,தினமும் ஒரு ஸ்பூன் தேனை சப்பிட வேண்டும்.தேனை உட்கொள்வதால், உடலில் இன்சுலின் அளவு அதிகரித்து, இரத்த சர்க்கரையின் அளவு குறையும் என்று பல ஆய்வறிக்கைகள் கருத்து தெரிவிக்கின்றன


கொலஸ்ட்ரால் மேம்படும்.

தேன் நம் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. உணவு முறையில் சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்துவது ஒரு புத்திசாலித்தனமான செயல் ஆகும் .

எலும்புகளை பலப்படுத்தும்

தேன் மற்றும் கால்சியம் சத்துக்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றன. உணவு முறை சார்ந்த காரணிகளில், கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்களை அதிகம் உறிஞ்சும் திறன் தேனில் தான் காணப்படுகிறது.

இதய நோய்கள்

தமனி இரத்தக்குழாய்களில் மெட்டல் அடைப்புகள் மற்றும் மாரடைப்பு ஆகியவை ஏற்படுவதை தடுக்க தேன் உதவுகிறது . இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க பாலிபினால்கள் கூட உதவுகின்றன; தேனில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் இதயத்தை பாதுகாக்க உதவும்


புற்றுநோய்

தேனில் இருக்கும் அழற்சிக்கு எதிரான பண்புகள், புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோயை தடுக்க உதவும்; உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, அது புற்றுநோய்க்கு எதிராக போராடும் சக்தியினை தேன் உடலுக்கு நல்குகிறது . தேன் ஆரோக்கியமான செல்களை தவிர்த்து, சேதமடைந்த புற்றுநோய் செல்களை மட்டும் தேர்வு செய்து அழிக்கின்றது .




தேனினால் ஏற்படும் பக்க விளைவுகள்

 சரியற்ற இதய துடிப்பு, மங்கிய பார்வை, தலை சுற்றல், டையேரியா, பலவீனம், காய்ச்சல் ஆகிய அசௌகரிய பிரச்சனைகளை தேன் ஏற்படுத்தலாம்.

தேனில் இருக்கும் சில பொருட்களால் கர்ப்பிணிகளுக்கு அபாயம் நேரிடலாம்.
ஆகையால், கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால்கொடுக்கும் பெண்கள் உரிய மருத்துவ
ஆலோசனை இல்லாமல்தேனை உபயோகிக்க வேண்டாம்.