நம் அன்றாடம்உண்ணும்உணவில்சேர்க்கப்படும்பொருள்தான் உப்பு. நாம் சமைக்கும் உணவில உப்பின்அளவுசிறிதளவுகூடினாலோஅல்லது குறைந்தாலோஅந்த உணவுப் பொருளின் ருசியானது மாறுபட்டு விடுகிறது. பொதுவாகஉப்புஎன்பது கடல் நீரில் இருந்துதான்தயாரிக்கப்படுகிது. ஆனால் இந்துப்பு என்கிற ஹிமாலயன் உப்பு பாறைகளில் இருந்தே வெட்டி எடுக்கப்படுகிறது.
'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே'
இப்படி உப்பு பற்றிய பழமொழிகள் பல இருக்கின்றன.
உப்புக்கு மிகப்பெரிய மதிப்பு இருந்தது.நிரந்தர மற்றும் ஸ்திரத்தன்மையின் சின்னமாக இருந்தது உப்பு.அட்சய திருதியை நாளன்று கடலில் இருந்து பெறப்படும் உப்பை தானமாகக் கொடுத்தால் வற்றாத செல்வம் பெருகும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது.
நம் உடலுக்கு பாதிப்பை தரும் அயோடின் கலந்த உப்பினை தவிர்த்து அன்றாட உபயோகத்திற்கு எந்த உப்பினை பயன்படுத்தலாம் என்று கேட்டால், நம் முன்னோர்கள் உபயோகப்படுத்திய இந்து உப்பினை பயன்படுத்தலாம் என்று கூறுகிறது சித்த மருத்துவம்.
இந்து உப்பு என்றால் என்ன?
இந்துப்பு என்கிற ஹிமாலயன் உப்பு பாறைகளில்இருந்தே வெட்டி எடுக்கப்படுகிறது.
பஞ்சாப்,ஹரியானா, பகுதிகளிலும், இமயமலை பகுதிகளில் இந்த உப்பானது மலைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இந்து உப்பானது வெள்ளை, சிவப்பு மற்றும்ஊதா நிறங்களில் காணப்படுகின்றது. முந்தைய
பிரிவினை அற்ற இந்தியாவாக இருந்த போது இமாலய மலைத்தொடர்கள் பிரிக்கப்படவில்லை. ஆகவே இமாலய உப்பு என பெயர் வந்தது. இந்திய உப்பு என்பதுதான் இந்துப்பாக மாறியது. பிரிவினைக்கு பின்னர் சில உப்பு பாறைகள் பாகிஸ்தான் எல்லை பகுதியை சேர்ந்து விட்டன. உலகிலேயே மிகப்பெரிய உப்பு சுரங்கம் பாகிஸ்தானில் தான் இருக்கிறது.
இந்து உப்பின் சத்துக்கள்
இந்து உப்பின் சத்துக்கள் சாதாரண உப்பில் இருப்பதை போலவே இந்து உப்பில் சோடியம் குளோரைடு, அயோடின் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், இரும்பு, துத்தநாகம், போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.
இந்துப்புவின் நன்மைகள்
இயற்கையான தாது உப்புக்கள் ஏராளமான எண்ணிக்கையில் உள்ள இந்துப்புவில் 85 சதவிகிதம் சோடியம் மற்றும் 15 சதவிகிதம் கனிமங்கள் நிறைந்தவை.
கனிமங்கள் அதிகம்
இந்துப்புவில் 84 விதமான உடலுக்கு நன்மை தரும் கனிமங்கள் அடங்கி இருக்கின்றன.சாதாரண உப்பு பதப்படுத்தப்பட்டு அயோடின் சேர்க்கப்படும் அதில் உள்ள எல்லா சத்துக்களும் அழிந்து சோடியம் மட்டுமே மிஞ்சுகிறது. ஆனால் இந்துப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் நமக்கு சோடியம் உடன் கனிமங்களும் கிடைக்கின்றன.
நீர்ச்சத்தை பராமரிக்கிறது
உடலில் உள்ள நீர்த்தன்மையை சமப்படுத்தி பராமரிக்க இந்துப்பு மிக உதவி செய்கிறது. இதனால்
dehydration எனப்படும் நீர்சத்து குறைபாடு நீங்குகிறது.
ரத்த சர்க்கரையை சமன் செய்கிறது
ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்ற உப்பு இந்துப்பு.
ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இதனால் நமக்கு நிம்மதியான உறக்கம் கிடைப்பதுடன் தைராய்டு பிரச்சினைக்கும் தீர்வாக இருக்கிறது.இது ரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை சமன் செய்து விடுகிறது.
எலும்புகளை வலுவாக்குகிறது
உடல் வடிவத்திற்கும் வலிமைக்கும்
காரணமானவை எலும்புகள். உங்கள்
அன்றாட சமையலில் இந்துப்புவை
இணைத்து கொள்ளுங்கள். அதுவே
போதும்.
ஆஸ்துமா வியாதிக்கு அருமருந்து
தொண்டை வலி மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கிறது. இந்துப்பு நுரையீரல் சம்பந்தமான குறைபாடுகளை நீக்குகிறது. நுரையீரல்களில் உள்ள ம்யுகஸ்களின் உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் ஆஸ்துமா ஒவ்வாமை போன்ற உடல் பிரச்னைகளை போக்குகிறது.
தூக்க சுழற்சியை சரி செய்யும்
தூக்கமே இல்லாமல் நீங்கள் தவிக்கிறீர்கள் அல்லது முறையான தூக்க நேரங்களை கடைபிடிக்க முடியவில்லை என்றால் தினமும் உங்கள் உணவில் இந்துப்புவை சேருங்கள். உங்கள் தூக்க சுழற்சி சரியாகும். அதன் மூலம் உளவியல் ரீதியான முக்கிய சிக்கல்கள் சரியாகும்.
நாக்கின் ருசி தன்மையை அதிகப்படுத்தும்.
இந்து உப்பினை இளஞ்சூடான வெந்நீருடன் கலந்து வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் பல் வலி ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும். ருசி தன்மையை அதிகப்படுத்தும்.
கண்களுக்கும், இதயத்திற்கும் நல்லது
மற்ற உறுப்புகளை விட இந்துஉப்பு நம் கண்களுக்கு மிகவும் நல்லது நம் இதயத்திற்கும் நல்லது. நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தாது.
இந்து உப்பினால் நம் கண்களுக்கு அதிக பலன் இருப்பதால் பல ஆயுர்வேத கண் சொட்டு மருந்துகளில் இந்து உப்பு சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.
மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
குளிர்ச்சி தன்மை உடைய இந்த உப்பினை நாம் உபயோகப்படுத்தும் பொழுது நம் பசியை தூண்டுகிறது. எளிதில் செரிமானமாகும் திறன் உள்ளது. மலம் கழிப்பதில் கடினம் இருந்தால் அதனை சரி படுத்துகிறது.
கந்தர்வஹஸ்தாதி எனும் கசாயத்தில் இந்து உப்பும், வெல்லமும் ஒரு சிட்டிகை சேர்த்து குடிப்பதால் நாக்கில் ருசி இல்லாமல் போகும் தன்மையும், குடல் வாய்வு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் தீர்க்கப்படுகிறது.
இளமையை தக்கவைக்கவும் உதவுகிறது
இயற்கையாக கிடைக்கும் இந்துப்பு என்பது நமது இளமையை தக்கவைக்கவும் உதவுகிறது. உடல் வயதடையும் தன்மையை மாற்றி பொலிவுடன் உங்களை திகழ செய்கிறது.
பக்கவிளைவுகள்
இந்துப்பு பலவிதங்களில் உடலுக்கு நன்மை புரிகிறது ஆனாலும் சில சமயம் இதில் பக்கவிளைவுகள் இண்டாகின்றன.
இந்துப்புவில் ஏற்கனவே சொன்னது போல அயோடின் அளவு குறைந்திருப்பதால் சில பக்கவிளைவுகள் தைராய்டு உள்ளவர்களுக்கு ஏற்படலாம். இதனை தவிர்க்க கடல் உப்பு இந்துப்பு இரண்டையும் சம அளவில் கலந்து பயன்படுத்தலாம்.
அதிக அளவிலான சோடியம் உடலில் இருந்தால் பல்வேறு பக்க விளைவுகள் உண்டாகலாம். இது இரண்டு வகையான உப்பிற்கும் பொருத்தமான ஒன்றுதான். ஆகவே ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பை அதிகம் சேர்க்க கூடாது என்று சொல்லப்படுகிறது. அதிக அளவிலான உப்பு சிறுநீரக செயல் இழப்பு வரை கொண்டு செல்லும்.
கர்ப்பிணிகள் இந்துப்பின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது.
உப்பை அளவோடு பயன்படுத்தும்போது மருத்துவ குணம் நிறைந்திருக்கும்.ஆனால் சுவைக்காகப் பயன்படுத்தும் உப்பின் அளவு அதிகரித்தால் வறட்சி, முடி உதிர்தல், சருமத்தில் சுருக்கம், நாவறட்சி ஆகியவை ஏற்படும்.