" ஆலும் வேலும் பல்லுக்குறுதி " என்று நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டனர். பண்டைய காலம் முதலே நம்மை பாதுகாத்து வரும் ஒரு மூலிகை என்றால் அது வேப்பிலைதான். கசப்பு சுவையுடன் இருந்தாலும் இதனால் கிடைக்கும் பலன்கள் எண்ணற்றவை. ஆயுர்வேத மருத்துவத்தில் தொடங்கி தற்கால நவீன மருத்துவம் வரையிலும் வேம்பின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. வேம்பு என்பது பல நூற்றாண்டுகளாய் நம் பரம்பரியத்துடன் கலந்துவிட்ட ஒன்று.
வீட்டு வைத்தியம் என்று நினைத்தாலே நம் நினைவுக்கு முதலில் வரும் மூலிகை வேப்பிலைதான். இது நமது ஆரோக்கியம் சார்ந்தது மட்டுமின்றி நமது நம்பிக்கை சார்ந்ததாகவும் பல்லாயிரம் ஆண்டுகளாய் இருந்து வருகிறது. வேப்பமரத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவத்தில் பயன்படக்கூடியதுதான். இல்லை, தண்டு, காய், பழம் என அனைத்துமே மருத்துவகுணம் நிறைந்தது. தினமும் சிறிதளவு வேப்பிலை எடுத்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியாயத்திற்கு நல்லது. ஆனால் அதை ஆண்டு முழுவதும் செய்வது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். சித்திரை மாதம் தினமும் வேப்பிலை சாப்பிடுவது கோடைகால நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
ஆயுர்வேத மருத்துவத்தின்படி தினமும் வேப்பிலையை எடுத்துக்கொள்வது இரத்தத்தை சுத்திகரிக்கும், உடலில் உள்ள நச்சு பொருட்களை நீக்கும் இதன் பலன் உங்கள் முகத்தில் தெரியும். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பின் மூலம் இது பூச்சிக்கடிகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.
பூச்சி கடிகள் மற்றும் வயிற்று அலர்ஜியால் ஏற்படும் விஷத்தை முறிக்கும் திறன் வேப்பை இலைக்கு உள்ளது. இதன் சாற்றை அரைத்து சாறு எடுத்து சிறிது காயம் பட்ட அல்லது பூச்சி கடித்த இடத்தில் தடவலாம். வயிற்று போக்கால் அவதிபடுவோம் வேப்பை இலையின் சாற்றை பருகினால் போதும். விஷத்தின் தன்மை முறிந்து குணமாகும்.
சமீபத்திய ஆராய்ச்சியில் வேப்பிலை புற்றுநோயை சரிசெய்ய பயன்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு வேப்பிலையில் உள்ள அசாடிராக்ஸிடின் என்னும் பொருள் தான், உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைத்து, புற்றுநோயைத் தடுப்பதாக சொல்லப்படுகிறது. எனவே புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க வேப்பிலையை தினமும் சிறிது சாப்பிடலாம்.
பக்கவாதம் போன்றது தான் கரோனரி இதய நோயும். உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள் தான் கரோனரி இரத்த நோயால் பாதிக்கப்படுவார்கள். உடல் பருமன் உள்ளவர்கள் வேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், அது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, கரோனரி இதய நோயின் அபாயத்தைக் கணிசமாக குறைக்கும்.
சிலருக்கு அதிகமான உடல் சூடு மற்றும் பிரயாணம் அதிகம் செய்பவர்களுக்கு இது போன்ற சீறுநீரக பாதை தொற்று அடிக்கடி ஏற்படும். சிறுநீரக பாதை தொற்றின் காரணமாக பளுதடைந்தால் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும். இதை ஆரம்பத்திலேயே மிக எளிய முறையில் தடுக்கலாம். எப்படியெனில் தினமும் காலையல் வெறும் வயிற்றில் வேப்பை இலையை தண்ணீரில் பிச்சுப்போட்டு முதல் நாள்ளே ஊற வைத்து அந்த தண்ணீரை குடிக்கலாம். அல்லது அடிக்கடி வெளி இடங்களுக்கு செல்பவர்கள் வேப்பை இலையை வேக வைத்த தண்ணீரை லெமன்னுடன் சேர்த்து குடிக்கலாம்.
உடல் சூடு அல்லது கம்பியூட்டரில் அதிகம் வேலை செய்பவர்கள் கண்கள் மிகவும் சோர்வுடனும் வலியுடனும் காணப்படும். அப்படி சோர்வுடன் இருப்பவர்கள் தினமும் கண்களை வேப்பை இலையில் தண்ணீரில் கழுவினால் கண்களின் சூடு குறைந்து நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.