பக்கிங்காம் கால்வாய் வரலாறு

 சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக வங்காள விரிகுடா வரைக்கும் விரிந்து இருக்கிற பக்கிங்காம் கால்வாய் பற்றி தான் பார்க்கப் போறோம். 


இந்த கால்வாய் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கட்டப்பட்டது. இந்த கால்வாயை சென்னையில் வெட்டு கால்வாய் என்றும் ,ஆந்திராவில் உப்புக் கால்வாய் என்றும் கூறுவார்கள். இந்த கால்வாய் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தமிழ்நாட்டுல இருக்கிற விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வரை சுமார் 420 கிலோ மீட்டர் நீளம் வரை இருக்கும். இது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் முழுவதும் வணிக போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டது.  ஆந்திராவில் 757 கிலோமீட்டரும் தமிழ்நாட்டில் 170 கிலோ மீட்டரும் இருக்கம் இந்த கால்வாய் சென்னையில் மட்டும் சுமார் 31 கிலோ மீட்டருக்கு கட்டப்பட்டுள்ளது.  இந்த கால்வாய் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் 796 கிலோமீட்டர் நீண்டு காணப்படும். 2008 ஆம் ஆண்டு   இந்தியாவில் நான்காவது தேசிய நீர்வழி போக்குவரத்தில் இந்த கால்வாய் இடம் பெற்றுள்ளது. அப்போது இதன் நீளம் 1078 கிலோ மீட்டர். அதன் பிறகு 2016 இல் பக்கிங்காம் கால்வாய் 2899 கிலோமீட்டருக்கு நீட்டிக்கப்பட்டது.

 

1876 ல் இருந்து 1878 இல் தான்  பக்கிங்காம்  கால்வாய் கட்டப்பட்டது எதற்காக இந்த கால்வாய் கட்டப்பட்டது என்றால் 1876இல் சென்னை  கடுமையான வரட்சிக்கு  உட்பட்டது. அப்போது ரயில் போக்குவரத்து, கால்வாய் மற்றும் அணைக்கட்டு கட்ட பிரிட்டிஷ் அரசாங்கத்தால்  முடிவு  செய்யப்பட்டது. இது மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் நோக்கத்தோடுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த கால்வாயில் சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாய் கட்டுவதற்கு  திட்டமிடப்பட்டது. ஆனால் அதில் மக்களுக்கான ஊதியம்  25 லட்ச ரூபாய். நவீன வசதிகள் கொண்டு கட்டப்படவில்லை.

மனித உழைப்பினால் மட்டுமே இந்த கால்வாய் உருவாக்கப்பட்டது. 1877ல் சென்னை ஆளுநராக இருந்த  யூடிக் ஆஃப் பக்கிங்ஹாம் அவருடைய முயற்சியில்தான் இந்த கால்வாய் வெட்டப்பட்டது. அதனால் இந்த கால்வாயிக்கு  பக்கிங்ஹாம் கால்வாய் என பெயர் வந்தது. இந்த கால்வாய் சென்னை வடக்கே நெல்லூர், ஓம்கூர் ,விஜயவாடா காக்கிநாடா, பல்லவரம் வரை விரிந்து காணப்படுகிறது. 

இந்த கால்வாய் வழியாக பயணம் செய்த அனைவரும் அவர்கள் புத்தகத்தில் இந்த கால்வாயை பற்றிய குறிப்புகளை கூறியுள்ளார்கள். பாவேந்தர் பாரதிதாசன் 1934 மார்ச் 31ம் தேதி மயிலாப்பூரில் இருந்து சென்னைக்கு இந்த கால்வாய் வழியாக பயணம் செய்துள்ளார்.அது குறித்து தன்னொடு புத்தகத்தில் ஒடப்பாட்டு என்ற பகுதியில் பாடலகவே பாடியுள்ளார்.  இந்த பக்கிங்காம் கால்வாய் சென்னைக்கு ஒரு அரணாக உள்ளது அதாவது கடல் நீர் விவசாய நிலங்களில் உட்புகாதவாரு ஒரு தடுப்பணையாக அமைந்திருந்தது.  அந்த கால்வாய் இப்போது பராமரிப்பு இல்லாமல் புயல், சுனாமி மற்றும் கழிவு நீர் போக்குவரத்து  காரணத்தால்  பயங்கரமாக சேதமடைந்துள்ளது. அதனால் கால்வாய் தன்னுடைய  இயல்பு நிலையை இழந்து உள்ளது என்று  சொல்லலாம். அது மட்டுமில்லாமல் சென்னையில் சுனாமி வந்தபோது இந்த கால்வாயால்  தான்  மக்களை ஓரளவு காப்பாற்றியது அப்படி சொன்னால் கூட  அது மிகையாகாது