டான்ஸிங் பிளேக்கால் உயிரிழந்த மக்கள் !!!

 மர்ம நோயினால் மக்கள் கொத்துக்கொத்தகாக  உயிரிழப்பது தொடர்ந்து நடந்துக்கிட்ட தான் இருக்கிறது. அது மாதிரி 16 ஆம் நூற்றாண்டில் ஆயிரக்கனக்கான மக்களின் உயிரை வாங்கிய  டான்ஸிங் பிளேக் நோயை பற்றி பார்ப்போம்.

நடனம் என்றால் நீங்கள் நினைப்பது போல ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ ஆடுவதல்ல இவர்கள் மாதக்கணக்கில் நடனமாடியிருக்கிறார்கள். தங்களை அறியாமல் மயங்கி விழுந்தால் தான் உண்டு. இல்லையென்றால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டியிருப்பார்கள்.


1518ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு நல்ல காலை வேலையில் தற்போது பிரான்ஸில் உள்ள ஸ்டார்ஸ்போர்க் என்ற ஊரில் அன்றைய காலகட்டத்தில் மோட்டார் வாகனங்கள் இல்லாமல் மக்கள் கால்நடையாகவோ அல்லது விலங்குகள் அல்லது மனிதர்களை வைத்து இழுத்துச் செல்லப்படும் வண்டிகளிலோ பயணித்துக்கொண்டிருந்தனர். எல்லாம் இயல்பாகச் சென்று கொண்டிருந்தது. 

அப்பொழுது அங்கு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த ஃப்ரூ ட்ரோஃபியா என்ற பெண் திடீரென நடுரோட்டில் தானாக நடனம் ஆட துவங்கினால் அங்கு எந்த இசையும் கேட்கவில்லை. அவராக எதைப் பற்றியும் சிந்திக்காமல் நடனமாடினார். முதலில் இவர் நடனமாடுவதைப் பார்த்து ஊர் மக்கள் எல்லாம் சிரித்தனர். 

ஆனால் அவர் நடனம் மணி நேரக் கணக்கில் நீண்டது. இந்த பெண் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கூறினர். சிலர் இந்த பெண்ணிற்குப் பேய் பிடித்து விட்டது என்றும், சிலர் சித்தம் கலங்கிவிட்டது என்றும் பேசினர்.

ஆனால் இவர் ஆட்டம் இரவெல்லாம் தொடர்ந்தது. பலர் இவரை நிறுத்த முயற்சி செய்த போதும் முடியவில்லை. 

மறுநாள், அதற்கு மறுநாள் என இவர் ஆடிக்கொண்டே இருந்தார். சாதாரண மனிதனால் இப்படித் தொடர்ந்து நாள் கணக்கில் ஆட முடியாது என்பதை எல்லோரும் உணர்ந்தனர். ஆனால் அவருக்கு என்ன நடந்தது என்று கண்டு பிடிக்க முடியவில்லை. 

இந்நிலையில் அந்த பெண் ஆடிக்கொண்டிருக்கும்போதே மேலும் சிலரும் அவருடன் ஆட துவங்கினர். அதன் பின் தான் விபரீதம் புரிந்தது. இது ஒரு விதமான நோய் இது மற்றவர்களுக்குப் பரவி வருகிறது என்பது மக்களுக்குப் புரிந்தது. ஒரு பெண் நடனமாடுவதில் துவங்கிய இந்த பிரச்சினை ஒரே வாரத்தில் 34 பேர் நடனமாடுவது வரை சென்றது. 

நடுரோட்டில் இரவு பகலாகப் பலர் நடனமாடத் துவங்கினர். இதனால் மக்கள் மத்தியில் பெரும் பயம் தொற்றிக்கொண்டது. இவர்கள் எல்லாம் என்ன ஆவார்கள் இதை எப்படி நிறுத்துவது என யாருக்கும் தெரியவில்லை. 

இதையடுத்து டாக்டர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அழைக்கப்பட்டு இது ஏன் ஏற்படுகிறது என கண்டுபிடிக்க உத்தரவிடப்பட்டது. அப்பொழுது டாக்டர்கள் இதை ஆய்வு செய்து இவர்களுக்கு ரத்த சூடு ஏற்பட்டுள்ளது. 

அதனால் தான் இவர்கள் ஆடுகிறார்கள். ஆடினால் தான் ரத்த சூடு தனியும். இவர்கள் தற்போது தங்களையே மறந்து ஆடுகிறார்கள். ரத்த சூடு குறைந்ததும் அவர்களே நின்று விடுவார்கள் என கூறினர். 

இதனால் இவர்கள் ஆடுவதை ஊக்குவிக்க அப்போதைய அரசு இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே இடத்தில் ஆட வைத்துஅவர்கள் ஆடுவதற்கு ஏற்ப இசைக்கலைஞர்களை வைத்து இசைகளை இசைசக்க ஏற்பாடு செய்தது. 

இரவு பகலாக இசைக்கலைஞர்கள் மாறி மாறி இசைத்துக்கொண்டே இருந்தனர். டாக்டர்கள் இவ்வாறு செய்வது மூலம் அவர்கள் சீக்கிரம் குணம் அடைவார்கள் என அரசிடம் தெரிவித்ததால் அரசு இதைச் செய்தது. 

ஆனால் இது படுமோசமான விளைவைக் கொண்டு வந்தது. முதல் பெண் ஆடத் துவங்கி சுமார் 1 வாரத்திற்குப் பின்பு இந்த இசை நிகழ்ச்சி துவங்கிய நிலையில் முதல் 34 பேர் ஆடினார். ஆனால் நாள்கள் செல்ல செல்ல ஆடுபவர்களின் எண்ணிக்கை அதிகமானது. மக்கள் மத்தியில் இந்த நோய் பரவிக்கொண்டே வந்தது. 

சுமார் 1 மாதம் கழித்து 400 பேரை இந்த நோய் தாக்கியிருந்தது. இவர்களை எல்லாம் எப்படி காப்பாற்றப்போகிறோம் என யாருக்கு தெரியவில்லை. இதற்கிடையில் ஆடிக்கொண்டிருந்தவர்களின் சிலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்க துவங்கினர். 

டாக்டர்கள் இதற்குத் தீர்வு என்ன என்றே தெரியாமல் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டுக்கொண்டேயிருந்தனர். ஆனால் அதற்கு என்ன காரணம் என யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஒரு மாதத்தைக் கடத்தும் இந்த நடன வியாதி பரவிக்கொண்டே இருந்தது. 


தினமும் சராசரியாக 14-15 பேர் டான்ஸ் ஆடி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தனர். இதைத் தடுக்க முடியவேயில்லை. கிட்டத்தட்ட ஒரு ஊரே பைத்தியம் பிடித்தது போல நடனம் ஆடிக்கொண்டே இருந்தனர். இரண்டு மாதங்களைக் கடத்தும் இந்த நடன வியாதி குறையவேயில்லை. பலர் உயிரிழந்தனர். பலர் நடனம் ஆடினர். இதனால் அரசு என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்தது. 

 இவர்கள் நடனம் ஆட ஆரம்பித்த  4 மாதத்திற்கு பின்பு படிப்படியாக நடனம் ஆடுபவர்களின் எண்ணிக்கை குறைய துவங்கியது. புதிதாக யாருக்கும் இந்த நடன வியாதி ஏற்படவில்லை. நடனம் ஆடிக்கொண்டிருந்தவர்களும் அவர்களே கொஞ்சம் கொஞ்சமாக தேறி இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப துவங்கினர். 

4 மாதங்களுக்கு பின்பு இசை நிகழ்ச்சியும் நிறுத்தப்பட்டது. நடனம் ஆடுபவர்களும் முற்றிலுமாக நின்று போனார்கள். ஆனால் இது ஏன் நடந்தது எப்படி நடந்தது என யாருக்கும் தெரியாது. பலர் இந்த நடன வியாதி குறித்து ஆராய்ச்சி நடத்தியும் உண்மையான காரணத்தைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை

இது போன்று தற்போதைய ஐரோப்ப கண்டத்தில் 14-17ம் நூற்றாண்டுகளுக்கு மத்தியில் 2-3 சம்பவங்கள் நடந்துள்ளது. ஒரு இடத்தில் ஒரு குறிப்பிட்ட பாலத்தில் சென்ற அனைவரும் இந்த நடன வியாதியால் பாதிக்கப்பட்டு ஒரே நேரத்தில் சுமார் 500 பேர் வரை ஒரே பாலத்தில் நின்று ஆடி அந்த பாலமே இடிந்து விழுந்து பலர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 

சரி இதற்கு என்ன தான் காரணமாக இருக்கும் எனப் பலர் ஆராய்ச்சி செய்தனர். அதில் பல தகவல்கள் கிடைத்தது. அது பற்றி கீழே காணலாம் வாருங்கள். 

இந்த நடன வியாதிக்கு பலர் கூறும் முக்கிய காரணம் பிரெட்களில் பரவிய விஷக்கிருமி என்று கூறுகின்றனர். எர்கோட் பங்கே ( ergot fungi) என்ற கிருமி உடலுக்குள் சென்று அது மூளையில் ஒரு விதமாக ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி மனிதர்களைத் தன்னை மறந்து டான்ஸ் ஆட வைத்துள்ளது எனக் கூறுகின்றனர். 

சிலர் இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து விஷய வாயு காற்றில் பரவி அதை மக்கள் சுவாசித்ததால் அவர் பித்து பிடித்து இப்படி நடனம் ஆட துவங்கிவிட்டனர். பின்னர் காற்றில் இந்த விஷ வாயுவின் தாக்கம் குறைந்ததும் அவர்கள் அதிலிருந்து மீண்டனர் என கூறுகின்றனர். 

இந்த சம்பவம் நடந்து பல நூற்றாண்டுகள் ஆகியும் இன்னும் அப்படிப்பட்ட டான்ஸ் வியாதி வந்ததற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை முதலில் இது வியாதி தானா என்பது தெரியவில்லை. இன்று வரை இந்த டான்ஸ் பிளேக் ஏன் நடந்தது எதற்காக நடந்தது? பின்பு எப்படித் தானாகச் சரியாகியது என எல்லாம் பல நூற்றாண்டுகள் ஆகியும் இன்றும் மர்மம் தான்.