கிபி 705 ஆம் ஆண்டில் ஜப்பானின் தெற்குப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரின் துவக்கத்தில் புஜிவாரா மஹிடோ ஒரு ஹோட்டலை தொடங்கினார். அப்போது கியுன் வம்சம் ஆட்சியில் இருந்தது அதனால் அந்த ஹோட்டலுக்கு நிஷியாமா ஆன்சென் கேயுன்கன் எனப்பெயரிட்டார்.
நிஷியாமா ஆன்சென் என்றால் இயற்கை வெந்நீர் ஊற்று என்று பொருள். அந்த காலத்தில் அரசாங்க அதிகாரிகள் இங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் எனென்றால் போரில் கலந்துகொண்ட வீரர்கள் அங்கு சென்று அங்கு உள்ள வெந்நீர் ஊற்றில் குளிப்பதால் அவர்களுக்கு போரில் ஏற்பட்ட காயங்கள் விரைவாக ஆறும் . அதனால் அனைவருக்கும் அதிக லாபம் கிடைத்து.
இந்த விடுதியில் மொத்தம் 37 அறைகள் மட்டுமே இருந்தன. இந்த விடுதிக்கு வரும் அனைவரும் கூறுவது விருந்து உபசரிப்பு பற்றி தான். அதுமட்டுமில்லமால் விருந்தினருக்கு பிறந்தநாள் என்றால் சிறப்பு விருந்துகள் உண்டு. மேலும் அங்கு செல்லும் விருந்தாளிகளுக்கு பாரம்பரிய ஆடை மற்றும் காலணிகள் வழங்கப்படும் அதை அவர்கள் அணிய வேண்டும்.
52 தலைமுறைகளாக புஜிவாரா வம்சத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது இதனால் இந்த ஹோட்டலின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
1997 ஆம் ஆண்டு இதனை புதுப்பித்தார்கள்.ஆனாலும் சேவைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. அதே ராஜ உபச்சாரம் தான் இன்றும்.