சர்க்கரை நோயிக்கான எச்சரிக்கை..

 சர்க்கரை நோயிக்கான எச்சரிக்கையும் அதை கட்டுப்படுத்துவதற்கான உணவு முறையும்:

 



சில குறிப்பிட்ட அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் சர்க்கரை நோயை எப்போதும் கட்டுக்குள் வைக்கலாம். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக சர்க்கரை பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.என்னென்ன அறிகுறிகள் என்பதை பார்க்கலாம்.

இரத்தத்தில் அதிக அளவு குளுக்கோஸ் சேரும் போது அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படு கிறது. சர்க்கரை நோய் டைப்-1, டைப்-2 என்று இருவகைப்படுகிறது. ஒன்று கணையத்தில் இன்சுலின் சுரப்பு இல்லாமல் போவதால் உண்டாவது டைப் -1 சர்க்கரை நோய். பெரும்பாலும் குழந்தைகளுக்கு இது உண்டாகிறது. இவர்களுக்கு மாத்திரைகளும் ஊசிகளும் கட்டாயம்.


டைப் -2 சர்க்கரை நோயானது பெரியவர்களுக்கு உண்டாகக்கூடியது. கணையத்தில் இன்சுலின் சுரப்பு இருக்கும்.ஆனால் மிக குறைவாக இருக்கும். இவர்கள் மாத்திரைகளோடு உணவு பழக்கத் தையும் கடைபிடிக்க வேண்டும்.

 

அதிகமான தாகம் வறட்சி
 

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்தாலும் கூட அவ்வபோது தொண்டையில் தாகம் எடுப்பது போன்ற உணர்வு அதிகமாக இருக்கும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் போன்ற உணர்வு அதிகரிக்கும். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காமல் இருக்கும்.  சாதாரணமாக உடல் காய்ச்சலின் போது உடலில் நீர் வறட்சி உண்டாவ தும், டீ ஹைட்ரேட் ஆவதும் உண்டு.


​சிறுநீர் கழிக்க வேண்டும் உணர்வு


நாள் ஒன்றுக்கு 4 அல்லது 5 முறை சிறுநீர் கழிப்பது சரி. ஆனால் அதற்கு அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டும் போல் தோன்றுவதும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் இதற்கான அறிகுறிதான். இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது அவை இரத்த ஓட்டத்தில் திரவங்களின் அளவை அதிகரித்து சிறுநீரகத்துக்கு அதிக அழுத்தம் கொடுக்கும்.


 

சோர்வும் மந்தமும்


அவ்வபோது பசி எடுப்பதும் சாப்பிட்டதும் களைப்பை உண்டாக்குவதும் கூட தொடக்க கால சர்க் கரை நோயின் அறிகுறி. உடலில் இருக்கும் நரம்புகள், திசுக்கள், இதயத்தசைகள், மூளை, நரம்பு மண்டலம் இரத்த ஓட்டத்தில் இருக்க கூடிய குளுக்கோஸை உறிஞ்ச இன்சுலின் அளவு போதுமான அளவு இருக்க வேண்டும். அவை குறையும் பட்சத்தில் அவற்றால் சரிவர வேலை செய்ய முடியாது அதனால் உடல் சோர்வு, அசதி போன்ற தொல்லைகள் வரக்கூடும். 


​கண் பார்வையில் மங்கல்


கண் பார்வை கூர்மையானவர்களுக்கு பார்வை திறன் மங்கலாக இருக்கும். பார்வையில் ஏற்கனவே குறைபாடு இருப்பவர்களுக்கு இவை மேலும் மங்கலான பார்வைகுறைபாட்டை உண்டாக்கும். கண்களில் இருக்கும் ரெட்டினா பகுதியை பாதிக்கும். அறிகுறியை அலட்சியம் செய்தால் கண் பார்வையை மங்க செய்து தீவிர பாதிப்பை உண்டாக்கிவிடும். 


​ஆறாத காயம்


பொதுவாக உடலில் எங்கு காயம் ஏற்பட்டாலும் உடலே உள்ளிருக்கும் மருத்துவரை கொண்டு அடுத்த இரண்டு மணி நேரத்தில் காயங்களை ஆற்ற கூடிய வேலையை தொடங்கும். அத்தகைய ஆற்றலை அளிக்கு போதுமான இன்சுலின் சுரக்காத போது காயங்கள் ஆறுவதிலும் அதிக தாமதம் உண்டாகும்.
சர்க்கரை நோய் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் அவை அந்த காயத்தை ஆற செய்யாமல் அதிகப் படியாகவே தாக்க தொடங்கும். உடலில் இருக்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.
 

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகள்!!

 


பாகற்காய்: பாகற்காயில், கீரையைவிட அதிக அளவு கால்சியமும் இரும்புச்சத்தும் போதுமான அளவு பீட்டா கரோட்டினும் உள்ளது. பாகற்காய், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.


வெந்தயம்: 

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் வெந்தயத்தை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். இவற்றில் இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயமின், நிகோட்டின் அமிலங்களும் நிறைந்து உள்ளன. அவை உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன், உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது. வெந்தயத்தில் உள்ள வைட்டமின் ஏ சர்க்கரைநோயால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்கிறது.


நாவல் பழம்:

நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்து உள்ளன. நாவல் பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும்.


 

 

 

நெல்லிக்காய் : 

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இந்திய மருத்துவ முறைகளில் பெருமளவில் பயன்படுத்தப்படுவது, அரை நெல்லிக்காய். இதில் அதிக அளவில் வைட்டமின் சி இருப்பதால், நெல்லிக்காயை அரைத்து அதன் சாற்றைக் குடிப்பது கணையத்தைத் தூண்டும். இரண்டு நெல்லிக்காய்களை எடுத்து, அதன் விதையை அகற்றிவிட்டு அரைத்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு டீஸ்பூன் அளவு சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்துவந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.