
தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வருவாய்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தாசில்தார். துணை தாசில்தார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள் என கூறினார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
from Dinakaran.com |30 Jun 2020 https://ift.tt/3gbYm9U