சர்வதேச நாய்கள் தினம்: நாய்களின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்கான விழிப்புணர்வு

சர்வதேச நாய்கள் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், நம் வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறி மகிழ்ச்சி, தோழமை மற்றும் அன்பை அள்ளித் தரும் நாய்களைப் போற்றவும், அவர்களின் விசுவாசமான நட்பிற்கு அடையாளமாகவும் கொண்டிருக்கிறோம்.


ஆதிகாலத்திலிருந்து, நாய்கள் மற்றும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் நேர்மறையான உறவுகளை உருவாக்கி வந்துள்ளனர். ஆரம்ப காலத்தில், மனிதர்கள் வேட்டையின் போது உதவிக்கரமாக நாய்களைப் பயன்படுத்தினார்கள், இது இன்று கூட பல்வேறு இடங்களில் தொடர்ந்து வருகிறது. நாய்கள் மனிதர்களோடு ஒரு ஆழமான உறவை ஏற்படுத்துகின்றன, மேலும் அவர்களுக்கு உடல் மற்றும் மனம் சரியில்லாத சூழ்நிலைகளில் அவர்களுக்கு உற்றத்துணையாக இருந்து அவர்களுக்கு தேவையான பணிகளைச் செய்கின்றன.


சர்வதேச நாய் தினத்தின் வரலாறு 2004 ஆம் ஆண்டு தொடங்குகிறது, அதில் செல்லப்பிராணிகள் மற்றும் குடும்ப வாழ்க்கை முறையைப் பற்றிய நிபுணர் கொலீன் பைஜ் ஆகஸ்ட் 26 ஆம் தேதியை சர்வதேச நாய் தினமாகக் குறிப்பிடும் முன்மொழிவை முன்வைத்தார். விலங்கு மீட்பு வழக்கறிஞராகவும் செயல்பட்ட பைஜ், தனது பத்து வயது நாய் ஷெல்டியை தத்தெடுத்த நாளாகவும் இந்த தேதியைத் தேர்வு செய்தார்.


இந்தியாவில் பரவலான காலநிலைகளைப் பொருட்படுத்திக் கொண்டு, செல்லப்பிராணிகளைத் தேர்வு செய்வதில் சில முக்கிய அம்சங்களைப் பார்வையிடுவது அவசியம்


சில நாய் இனங்கள், குறிப்பாக வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தவை, இந்தியாவின் வெயில் மற்றும் ஈரமுடைய காலநிலைக்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம்.


இந்நிலைகளுக்கு உகந்த நாய்களின் நலன் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.


எனவே, உங்கள் வீட்டின் மற்றும் வாழ்விடத்தின் காலநிலை மற்றும் சூழலுக்கு உகந்த செல்லப்பிராணிகளைத் தேர்வு செய்வது, அவர்களின் நலனையும் உங்கள் வாழ்க்கையின் அடிப்படையும் மேம்படுத்தும் முக்கிய பங்காகும்.



சர்வதேச நாய்கள் தின கொண்டாட்டம்

இந்த நாளைக் கொண்டாடுவதற்கு நீங்கள் நாய்கள் வைத்திருக்க அவசியமில்லை . தெருவில் உள்ள நாய்களைக் கூட நேசித்து அவர்களுக்காக இந்த நாளைக் கொண்டாடலாம். இந்த நாளில், அவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்து உதவி செய்யலாம். உங்கள் சிறிய அளவிலான ஒத்துழைப்பு, நாய்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்..

By salma.J