1. கற்றாழை ஜெல் : கற்றாழை பசையை (Aloe Vera Gel) தலை முடியில் தடவி, 30 நிமிடங்கள் ஊறவைக்கவும், பிறகு, குளிர்ந்த நீரால் கழுவவும், முடியின் வேகமான வளர்ச்சிக்கு முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

2. எண்ணெய்கள்: தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், மற்றும் ஜாதி எண்ணெய் ,விளக்கெண்ணெய் (Castor Oil) ஆகியவற்றை முடியில் தேய்த்து, மசாஜ் செய்யவும். இவை முடியின் வலிமையையும், வளர்ச்சியையும் மேம்படுத்த உதவுகின்றன.
3. மூலிகைகள்: கருவேப்பிலை (Curry Leaves) முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவக்கூடியது, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, முடியில் தடவுங்கள்,கற்றாழை,வெந்தயம் paste யை முடியில் தடவி, 30 நிமிடங்கள் ஊறவைக்கவும் பிறகு நன்கு கழுவவும்.
4. வெங்காயம்: வெங்காயம் (Onion) முடி வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படுகிறது, வெங்காயத்தின் சாறுஎடுத்து முடியில் தடவி, 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு நன்கு கழுவவும்.
5. சரியான உணவு:பிரோக்கோலி,உடலில் தேவையான வைட்டமின் மூலிகைகளை வழங்கும்,அதிகப்படியான புரோட்டீன்,முடி வளர்ச்சிக்கு தேவையான புரோட்டீன் மற்றும் ஊட்டச்சத்துகளை தருகிறது. அதிக நீர் குடிப்பது, உடல் நலத்தை மேம்படுத்துவதோடு முடியின் நிலையை சீராக்கும்.
6.முடி பராமரிப்பு : உங்கள் முடியை வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் அலசவும், இதற்கு மேலாக குளிப்பதைத் தவிர்க்கவும்,முடியின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, உங்கள் முடியை பரிசுத்தமாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்ளவும்.
இந்த முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் முடி வளரும். ஆனால், இதனுடன் நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து, ஆரோக்கியமான வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம்..
By salma.J