மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது. கோயிலின் வரலாறு, புராண கதைகள், சன்னதி விபரங்களைப் பற்றி காண்போம். மதுரை மாநகரத்துக்கு பெருமை கோரும் வகையில் மீனாட்சி அம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. நகரின் மைய பகுதியில் மிக பிரமாண்டமான கோபுரங்களுடன் கம்பீரமாக மீனாட்சி அம்மன் கோவில் காட்சியளிக்கிறது. மீனாட்சி அம்மன் கோயிலைப் பொறுத்தவரை, தற்போதைய முழுமையான அமைப்பு என்பது நாயக்கர் காலத்தில் எட்டப்பட்டது. ஆனால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நகரின் மையப்பகுதியில் கோயிலிருந்து வந்துள்ளது.
கோவில் பரப்பளவும் உள்ளமைப்பும்:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், 15 ஏக்கர்
பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில்,
எட்டுகோபுரங்களையும்,
இரண்டு விமானங்களையும் உடையது. அவ்விரண்டும்
கருவறை விமானங்கள்,
இந்திர விமானங்கள் என அழைக்கப்படுகின்றன. 32 கற்சிங்கங்களும்,
64 சிவகணங்களும், 8
வெள்ளை யானைகளும், கருவறை
விமானங்களைத் தாங்குகின்றது.தற்போது உள்ள மீனாட்சி அம்மன் கோயில் 13ஆம்
நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் எனவும்
அந்தக் கோயிலில் இருந்த பாண்டிய மன்னர் காலக் கல்வெட்டுகளில் இருந்து
தெரியவந்திருக்கிறது.
மீனாட்சி கோவில் பிறப்பு:
கி.பி. 1190
- 1216 காலகட்டங்களில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னரான குலசேகர
பாண்டியனால் இந்த கோவில் கற்களை கொண்டு
கட்டப்பட்டது . பிறகு, அந்தக்
கோயில் ஏதோ காரணத்தால் அழிந்துவிட,
அவருக்குப் பின்வந்த இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கோயில்
புதுப்பிக்கப்பட்டது என கல்வெட்டுகல்
மூலம் தெரியவந்தது என்கிறார் மாநிலத் தொல்லியல் துறையின் முன்னாள்
உதவி இயக்குனரும் ஆய்வாளருமான சொ. சாந்தலிங்கம்.
ஆயிரம் கால் மண்டபம்:
கோயில் வளாகத்திற்குள் அற்புதமான ஆயிரம் கால் மண்டபம்
(ஆயிரம் தூண் மண்டபம்) உள்ளது,
தெய்வீக உருவங்கள்,
பெண் இசைக்கலைஞர்கள் மற்றும் உதவியாளர் உருவங்களுடன் செதுக்கப்பட்ட 985 நெடுவரிசைகள்
உள்ளது . பொத்தாமரை குளம் (தங்கத் தாமரைக் குளம்), பக்தர்கள் புனித நீரில் நீராடக்கூடிய ஒரு பெரிய குளம், மதுரையில்
சிவன் நிகழ்த்திய அற்புதங்களைச் சித்தரிக்கும் சுவரோவியங்கள், அலங்கரிக்கப்பட்ட
ஒரு தூணால் சூழப்பட்டுள்ளது. மேற்கு சுவரில் ஒரு வாசல் மீனாட்சி சன்னதிக்கு
செல்கிறது. அதற்கு பல துணை சன்னதிகள் உள்ளன,
படுக்கை அறையுடன், சுந்தரேஸ்வரரின்
உருவம் ஒவ்வொரு இரவும் அதன் சொந்த சன்னதியிலிருந்து கொண்டு வரப்படுகிறது.
சித்திரை திருவிழா உருவான வரலாறு:
தமிழ் நாட்டையே திரும்பி பார்க்க வைக்கும் சித்திரை
திருவிழா என்றதும் மீனாட்சியும் கள்ளழகரும் தான் நினைவிற்கு வரும். மதுரையை ஆண்ட
திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் சித்திரை
மாதம் நடைபெறும்.மீனாட்சியம்மன் கோயில்,
அழகர் கோயில் ஆகிய இரு கோயில்களின் ஒருங்கிணைந்த விழாக்கள்தான் சித்திரைத்
திருவிழாவாக நடைபெறுகிறது.கள்ளழகர் மதுரை பகுதியில் உள்ள சோழவந்தான் அருகில்
தேனூர் என்ற இடத்தில் தான் முதலில்
ஆற்றில் இறங்கினார்.மதுரை மீனாட்சி கோவிலுக்கு பல திருப்பணிகளை செய்து கொடுத்தார்.
அப்போது மிக பெரிய தேர் கள்ளழகரால் பரிசாக குடுக்கப்பட்டது ,அந்த
தேரை இழுக்க மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் மதுரையை சுற்றி உள்ள ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் முன் வரவழைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தான் திருமலை நாயக்கர் மீனாட்சி
திருக்கல்யாணம், பட்டாபிஷேகம்
தேரோட்டம் ,கள்ளழகர்
ஆற்றில் இறங்கும் வைபோகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த சித்திரை திருவிழா மதுரையில் இன்றளவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.