Maruti Suzuki நிறுவனத்தின் Maruti Suzuki Brezza காரின் டிசைன், டைமென்சன், எஞ்சின், மைலேஜ் மற்றும் விலை பற்றி பின்வருமாறு காணலாம்.
டிசைன்
ப்ரீமா ஃபேஸ் 2022 Brezza, அவுட்கோயிங் மாடலில் இருந்து பாக்ஸி டிசைனை தக்கவைத்துள்ளதாக தெரிகிறது. SUV இன் தன்மையை உயர்த்திப்பிடிக்கும் ஹூட் மற்றும் சில்வர் ஸ்கிட் பிளேட்டுகளுடன் இது புதியதாகத் தெரிகிறது. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன் கிரில் குரோம் அஸன்டடுன் கூடிய கன்மெட்டல் ஃபினிஸ் மற்றும் கிரிஸ்டல் பிளாக் DRLகளுடன் புதிய டூயல் LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்களையும் கொண்டுள்ளது. மேலும், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்பக்க பம்பர் புதிய ஃபாக்லேம்ப் ஹவுஸிங்கை கொண்டுள்ளது.
ஸ்கொயர் ஆஃப் வீல் ஆர்ச்சுகள் மற்றும் பரந்த கிளாடிங்குடன் அசன்ட் வடிவியல் வடிவமைப்பு கொண்ட புதிய அலாய் வீல்களைக் கொண்டுள்ளது. மேலும் 2022 Brezza மின்சார சன்ரூஃப் உடன் வரும் முதல் மாருதி காராகும்.
புதிய நீளமான நேர்த்தியான LED டெயில்லைட்கள் மற்றும் பூட் லிட் முழுவதும் 'Brezza ' எழுத்துகளால் பின்புற பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த SUV பாணியை பூர்த்தி செய்ய பின்புற பம்பர் சில்வர் ஸ்கிட் பிளேட்டையும் கொண்டுள்ளது.
இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் சில்வர் ஃபினிஷுடன் டூயல்-டோன் பிளாக் மற்றும் ரிச் பிரவுன் தீம் மூலம் கேபின் ஹைலைட் செய்யப்பட்டுள்ளது. புதிய லேயர்டு டேஷ்போர்டு டிசைன் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் பிரீமியம் உணர்வைத் தருகின்றன. கூடுதலாக, வாகனம் ஒரு பிளாட் பாட்டம் டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் வீல் மற்றும் கன்ட்ரோல்கள் மற்றும் ஒரு பரந்த இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் வண்ண ஒருங்கிணைந்த MID ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
டைமென்சன்
Maruti Suzuki Brezza கார் 3995 mm நீளத்தையும் 1790 mm அகலத்தையும் 1685 mm உயரத்தையும் கொண்டுள்ளது. மேலும் இது 328 லிட்டர் பூட்ஸ்பேஸில் கிடைக்கிறது. இது 5 பேர் உட்காரும் இருக்கைகளில் கிடைக்கிறது.
எஞ்சின் மற்றும் செயல்திறன்
புதிய Maruti Suzuki Brezza அடுத்த தலைமுறை K-சீரிஸ் 1.5L டூயல் ஜெட், டூயல் VVT இன்ஜின் மூலம் இயங்குகிறது, இது ஒரு முற்போக்கான ஸ்மார்ட் ஹைப்ரிட் அமைப்புடன் 6,000rpm இல் 102bhp பவரையும் 4,400rpm இல் 136.8Nm டார்க் திறனையும் உருவாக்குகிறது. இந்த எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் ஸ்டீயரிங்-மவுண்டட் பேடில் ஷிஃப்டர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மைலேஜ்
Brezza காரின், LXI மற்றும் VXI வேரியண்ட் கார் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் 20.15 kmpl மைலேஜைத் தருகின்றன, அதே நேரத்தில் ZXI மற்றும் ZXI+ வேரியண்ட் கார் 19.89 kmpl (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மற்றும் 19.80 kmpl (ஆட்டோமெட்டிக்) மைலேஜைத் தருகின்றன.
விலை
Maruti Suzuki Brezza கார் 8.99 லட்சத்திலிருந்து 16.86 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கார் Brave Khakhi,Splendid Sliver,Sizzling Red,Exuberant Blue,Pearl Arctic White,Magma Grey போன்ற Single-Tone நிறங்களிலும் மற்றும் Splendid Sliver With Midnight Black Roof,Sizzling Red with Midnight black Roof,Brave Khakhi with Arctic White Roof போன்ற Dual-Tone நிறங்களில் கிடைக்கிறது.