Yamaha E01 Electric Scooter - சிறப்பம்சங்கள்

 இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையில் களமிறங்கும் முயற்சிகளில் யமஹா ஈடுபட்டுள்ளது. யமஹா நிறுவனம் தனது E01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ப்ரோடக்ஷன் மாடலை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ப்ரோடக்ஷன் மாடலின் டெயில் பகுதியில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் கிராப் ரெயில்கள் இண்டகிரேட் செய்யப்பட்டு, சீட் அளவில் சிறியதாகவும் வித்தியாசமாகவும் உள்ளது. எலெக்ட்ரிக் மோட்டார் சற்றே உயரமாகவும், முன்புற ஸ்பிராகெட்டுக்கு பின் பொருத்தப்படுகிறது.

இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான அரசு கொள்கை திட்டங்கள் மற்றும் மானியத் திட்டங்கள் குறித்து கூர்ந்து கவனித்து வருவதாகவும், சார்ஜ் ஏற்றும் கட்டமைப்பு நிலையங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வெளியிடப்பட்ட ஃபஸினோ 125 ஹைப்ரிட் ஸ்கூட்டர்கள் எங்களது மின்சார வாகன சந்தையில் இறங்குவதற்கான முதல் படி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கான மின்சார ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளும் நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

யமஹா நிறுவனம் E01 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டோக்கியோ மோட்டார் ஷோவில் கான்செப்ட் வடிவில் வெளியிட்டது. தைவானை சேர்ந்த கோகோரோ நிறுவனத்துடன் இணைந்து EC-05 என்ற மின்சார ஸ்கூட்டரையும் வெளியிட்டது. இந்த ஸ்கூட்டர் 90 கிமீ வேகம் செல்லும் திறன் கொண்டதுடன், 100 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பையும் வழங்கும்.

இந்த ஸ்கூட்டரின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கான மின்சார ஸ்கூட்டரை யமஹா வெளியிடும் வாய்ப்பு உள்ளது. பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ-க்யூப் மற்றும் ஏத்தர் 450எக்ஸ் மின்சார ஸ்கூட்டர்களுடன் போட்டி போடும்.