Nahak P-14 Bike - சிறப்பம்சங்கள்

 நஹாக் மோட்டார்ஸ் (Nahak Motors) நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் பைக்கை முன்பதிவு செய்வதற்கான விண்டோ (Pre-book Window) குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


நஹாக் பி-14 ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் பைக்கின் விலை 2.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், இந்த ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் பைக்கை, நஹாக் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு தொகை 11 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பி-14 ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் பைக்கின் எம்ஆர்பி விலையில் இருந்து, 10 சதவீதம் தள்ளுபடியை வழங்குகிறது.

நஹாக் பி-14 ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் பைக் அதிகபட்சமாக மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான டாப் ஸ்பீடுதான் என்பதில் சந்தேகம் இல்லை. நஹாக் பி-14 ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் பைக்கில், லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது.

நஹாக் பி-14 ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் பைக் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் மிக அதிகளவில் அறிமுகமாக தொடங்கியுள்ளன.

மத்திய, மாநில அரசுகளும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகளவில் ஆதரவு அளித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் மத்தியிலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அமோக வரவேற்பு காணப்படுகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் தவிர, சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களும் இந்தியாவில் தற்போது பிரபலமடைந்து வருகின்றன.