இந்தியாவின் 125சிசி ஸ்கூட்டர் செக்மெண்டில், யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் மாடலான ஃபேசினோ 125 எஃப்.ஐ ஸ்கூட்டரை ரூ. 66,430 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
புதிய யமஹா பாசினோ 125 ஹைப்ரிட் 2மாடலில் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் (SMG) அமைப்பைப் பெறுகிறது. இதன் காரணமாக வாகனத்தைத் ஸ்டார்ட் செய்யும் போது மின்சார மோட்டார் போல செயல்படுகிறது, இரண்டு பேர் அமர்ந்திருக்கும்போது அல்லது மலை ஏறும் நிலையில் ஸ்டார்ட்-அவுட்டின் போது பாதுகாப்பை கொடுத்து, அபாயத்தைக் குறைக்கிறது.
புதிய ஃபேசினோ 125 எஃப்.ஐ ஸ்கூட்டரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு ஏற்ற Blue Core சிங்கிள் சிலிண்டர் ஃப்யூயெல் எஞ்சின் உள்ளது. இது 8 பிஎச்பி பவர் மற்றும் 9.7 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும் திறன் கொண்டது.
ஃபேசினோ 125 Fi Hybrid ஸ்கூட்டர் BS-6 தரத்துடன் ஏர் கூல்ட், ப்யூயல் இஞெக்டட் (Fi), 125 சிசி ப்ளூ கோர் எஞ்சின் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. இதன் எஞ்சின் 6,500 RPM 8.2 PS அதிகபட்ச பவருடன் உள்ளது. மேலும் 5000 RPMல் 10.3 Nm டார்ட் ஜெனரேட் செய்கிறது.மேலும் 113 சிசி இழுவைத் திறன் கொண்ட ஃபேசினோவை விட, புதிய மாடல் 16 சதவீதம் கூடுதலாக மைலேஜ் தரும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாக யமஹா கூறுகிறது. அதன்படி, புதிய ஃபேசினோ மாடல் லிட்டருக்கு 58 கி.மீ மைலேஜ் தரும் என யமஹா கூறுகிறது.
முந்தை மாடலைக் காட்டிலும் இந்த ஸ்கூட்டர் 4 கிலே எடை குறைந்து 99 கிலோ எடை கொண்டதாக உள்ளது.
யமஹா ஃபேசினோ 125 Hybrid மாடலின் டிஸ்க் பிரேக் வெர்ஷனில் புளூடூத் இயக்கப்பட்ட யமஹா மோட்டார் சைக்கிள் கனெக்ட் எக்ஸ் செயலி மற்றும் அனைத்து எல்இடி ஹெட்லேம்ப்கள், DRLs, LED டெயில் லேம்ப்ஸ் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற அம்சங்கள் உள்ளன. இது தவிர, ஸ்கூட்டருக்கு ஒரு பக்க ஸ்டாண்ட் என்ஜின் கட்-ஆஃப் சுவிட்ச் உள்ளது.
இதில் 12 அங்குல அலாய் சக்கரங்கள் உள்ளன. ஒருங்கிணைந்த பிரேக்கிங் தொழில்நுட்பம் கொண்ட சிபிஎஸ் வசதி இந்த ஸ்கூட்டரில் உள்ளது. மேலும், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், சைட்-ஸ்டேண்ட் கட் ஆஃப் ஸ்விட்ச் ஆகிய தேவைகள் இந்த ஸ்கூட்டரில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
வண்ண விருப்பங்களைப் பற்றி பேசுகையில், டிஸ்க் பிரேக் பதிப்பு விவிட் ரெட் ஸ்பெஷல், மேட் பிளாக் ஸ்பெஷல், கூல் ப்ளூ மெட்டாலிக், டார்க் மேட் ப்ளூ, சுவே காப்பர், மஞ்சள் காக்டெய்ல், சியான் ப்ளூ, விவிட் ரெட் மற்றும் மெட்டாலிக் பிளாக் ஆகியவற்றில் கிடைக்கிறது. மறுபுறம், டிரம் பிரேக் பதிப்பில் டிரிம் விவிட் ரெட், கூல் ப்ளூ மெட்டாலிக், யெல்லோ காக்டெய்ல், டார்க் மேட் ப்ளூ, சுவே காப்பர், சியான் ப்ளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களிலும் கிடைக்கிறது.
புதிய யமஹா ஃபேசினோ 125 ஸ்கூட்டர், இந்தியாவில் ஹோண்டா கிராஸியா, ஹோண்டா ஆக்டிவா 125, சுஸுகி ஆக்செஸ், டிவிஎஸ் என்டார்க் 125 ஆகிய மாடல்களுக்கு சரிநிகர் போட்டியாக அமையும். விரைவிலேயே யமஹாவின் மற்றொரு ஸ்கூட்டரான Ray-ZR 125 FI மாடலுக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது.