அப்ரில்லா ஆர்எஸ்660 மோட்டார்சைக்கிளின் புதிய லிமிடெட் எடிசன் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
அப்ரில்லா நிறுவனம் AMA தேசிய சாலை பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றியினை பதிவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாகவே இந்த பிரத்யேக ஆர்எஸ்660 பைக் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
நீலம் மற்றும் வெள்ளை என 3 விதமான நிறங்கள் கலந்ததாக உள்ள இந்த புதிய பெயிண்ட் தேர்வில் அப்ரில்லா ஆர்எஸ்660 பைக் உலகளவிலேயே வெறும் 1,500 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.
புதிய ஆர்.எஸ்.660 மாடலில் டூயல்-பாட் எல்.இ.டி. ஹெட்லேம்ப், புல் கலர் டி.எப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் அபெக்ஸ் பிளாக், லாவா ரெட் மற்றும் ஆசிட் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் புதிய அப்ரிலியா ஆர்.எஸ்.660 விலை ரூ. 13.39 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 659சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த என்ஜின் 98.6 பி.ஹெச்.பி. திறன், 67 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
அப்ரிலியா ஆர்.எஸ்.660 மாடலில் பாதுகாப்பிற்கு குரூயிஸ் கண்ட்ரோல், 3-லெவல் கார்னெரிங் ஏ.பி.எஸ்., டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் ஐந்து ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த ஸ்பெஷல் ஆர்எஸ்660 பைக்கில் மட்டும் கியரை அதிகரிக்க கீழ்நோக்கியும், கியரை குறைக்க மேல்நோக்கியும் கியர்மாற்றியை கொடுக்க வேண்டும். ஸ்பெஷல் எடிசன் ஆர்எஸ்660 பைக்கின் முன்பக்க ஹெட்லேம்ப் கௌல் பேனல்கள் நன்கு பெரியதாக பொருத்தப்பட்டுள்ளன.
இவற்றுடன் புதியதாக பின் இருக்கையின் முனையில் கூடுதல் கௌல் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை பைக்கின் கவர்ச்சிகரமான தோற்றத்தினை மேலும் மெருக்கேற்றியுள்ளன.
அதிகப்பட்சமாக 10,500 ஆர்பிஎம்-இல் 100 பிஎச்பி மற்றும் 8500 ஆர்பிஎம்-இல் 67 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.
இந்தியாவில் 45% அப்ரில்லா இருசக்கர வாகனங்களின் விற்பனை நமது தமிழகம் உள்பட தென்னிந்தியாவில்தான் நடப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டே தென்னிந்தியாவில் மேலும் 100 மோட்டோப்ளெக்ஸ் ஷோரூம்களை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதற்காக அப்ரில்லா கொண்டுவந்துள்ளது.