விண்ணிலா அல்லது நீருக்கடியிலா? NASA

நாசாவின் வித்தியாசமான மற்றும் ஆச்சரியம் ஏற்படுத்தும் பிற பதிவுகளைப் போலவும் இந்த பதிவும் நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் விண்வெளி நிறுவனம் நாசா,தனது மற்றொரு மயக்கும் பதிவின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளது. விண்வெளியில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் சிகப்பு மற்றும் ஊதா நிறங்களில் கண்களை கவரும் அட்டகாசமான பிரதிபலிப்பாக இருக்கிறது. பார்ப்பதற்கு கடலை நினைவுப்படுத்துவதாக இருப்பதால் இதற்கு  Cosmic Reef அதாவது விண்வெளியில் உள்ள கடல் பாறை என பெயர் வைத்திருக்கிறது நாசா. 

விண்வெளி எவ்வளவு மர்மமாக இருக்கிறதோ அவ்வளவு அழகாக இருக்கிறது. விண்வெளியின் அனைத்து ரகசியங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். பொதுவாக, நம்மால் கண்டுபிடிக்க முடிந்தவை நம்மை வியப்பில் ஆழ்த்துவதில்லை. நாம் காணக்கூடியவற்றின் அழகும், மகத்துவமும் ஒவ்வொரு முறையும் நமக்கு வித்தியாசமான உணர்வுகளை கொடுக்கிறது.

நீருக்கு அடியில் எப்படி வண்ண வண்ண கற்கள் , பாறைகள் போன்றவை காணப்படுமோ அதே போல தோற்றமளிப்பதால்தான் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. பல நட்சத்திரங்கள் இணைந்து உருவான மாகெல்லானிக் கிளவுட் என குறிப்பிட்ட நாசா இதனை பால்வீதியின் செயற்கைகோள் விண்மீன் என தெரிவிக்கிறது. இது விண்வெளியிலிருந்து 160,000 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.

இதில் ஆரஞ்சு நிறத்தில் உள்ள நெபுலா கடந்த 2014 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது . இதனை NGC 2014 என அழைக்கின்றனர். இதில் பிரகாசிக்கும் மையப்பகுதி கனமான நட்சத்திரங்களின் தொகுப்பு என குறிப்பிட்ட நாசா , ஒவ்வொன்றும் சூரியனைவிட 10 முதல் 20 மடங்கு பெரியது என தெரிவித்துள்ளது.அதே போல ஊதா நிறத்தில் உள்ள நெபுலா கடந்த ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை NGC 2020 என அழைக்கின்றனர்.இது ஒரு தனி மாமத் நட்சத்திரத்தால் உருவாக்கப்பட்டது மேலும் சூரியனை விட 200,000 மடங்கு ஒளிரும் தன்மை கொண்டது என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள். இந்த புகைப்படங்களை பகிந்த நாசா , Cosmic Reef விண்வெளியின் அழகையும் மர்மத்தையும் காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளது.30ஆண்டுகளுக்கும் மேலான சேவையை கொண்டாடும் வகையில் , நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கியால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.