நீரிழிவு நோயை எவ்வாறு குணப்படுத்தலாம்

சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்னும் இந்த வியாதி பலரையும் அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றது. உலக சுகாதார மையம் உலகிலேயே அதிக அளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்தியர்களே ஆவர் என்று கணித்து உள்ளது. இந்த வியாதி பரம்பரை காரணமாக வர வாய்ப்புள்ளது. அதாவது நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா போன்ற இரத்த வழி சொந்தங்களில் யாருக்காவது இந்த நோய் (நீரிழிவு நோய் / sakkarai noi / Diabetes in Tamil) இருந்தால் அவர்களின் சந்ததியினருக்கும் இந்த நோய் தாக்க வாய்ப்பு அதிகம். மேலும் தவறான உணவுப் பழக்கங்களும் இந்த நோய்க்கான மிகப்பெரிய காரணியாகும். ஒரு முறை இந்த வியாதி தாக்கிவிட்டால் தொடர்ச்சியாகச் சிகிச்சை மேற்கொள்ளும் சூழல் நிலவும். இது கணையம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்.உடலில் உள்ள கணையம் என்னும் பகுதி இன்சுலினை சுரக்க வைக்கின்றது. இந்த இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்பட்டால் சர்க்கரை வியாதி ஏற்படும். 

பொதுவாக இந்த சர்க்கரை வியாதியில் மூன்று வகை உண்டு. முதலாவது வகை  (Type I Diabetes-IDDM- Insulin Dependent Diabetes Mellitus) குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்கவேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. பத்து சதவீதமான நீரிழிவு நோயாளிகள் வகை ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்களாவார்கள்.

இரண்டாவது வகை (Type II- NIDDM- Non Insulin Dependent Diabetes Mellitus) இன்சுலின் சுரப்பிகள் போதிய அளவு இன்சுலின் சுரக்காததாலோ அல்லது அப்படி சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுகின்றது. இந்த வகை நீரிழிவு கிட்டத்தட்ட 90 சதவீதமான நோயாளிகளில் காணப்படுகிறது. இந்தவகை நீரழிவை வயது வந்தவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு என்றும் கூறுவார்கள். இந்த வகை அதிக உடற்பருமன் உள்ளவர்களிடம் காணப்படுகின்றது. இந்த வகை நீரிழிவை உடல் எடையைக் குறைப்பதாலும் சாப்பாடுக் கட்டுப்பாட்டாலும் மற்றும் உடற்பயிற்சியினாலும் சிலசமயம் கட்டுப்படுத்தலாம்.

மூன்றாவது வகையான கர்ப்பக் கால நீரிழிவானது இரண்டு சதவீதம் முதல் நான்கு சதவீதமான பெண்களுக்கு கர்ப்பக் காலத்தின் போது ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடுகிறது. இருந்தபோதிலும், பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும். இரைப்பையும் குடலும் உணவிலிருந்து குளுக்கோஸ் எனும் வெல்லத்தை எடுத்து குருதியில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதியில் கலக்கிறது.

சர்க்கரை நோய் கட்டுக்குள் வைக்கும் உணவுகள் பல இருந்தாலும் அதை சரியான முறையில் சரியான நேரத்தில் எடுத்துகொள்வதன் மூலம் நிச்சயம் கட்டுக்குள் வைக்கலாம். இரத்தத்தில் சர்க்கரை அளவு எப்போதுமே அதிகமாகவே இருக்கிறது என்பவர்கள் மருந்துகளோடு இந்த உணவு வைத்தியத்தை முயற்சியுங்கள். பிறகு உங்கள் இரத்த சர்க்கரை அளவை பரிசோதியுங்கள். நிச்சயம் கட்டுக்குள் இருக்கும்.

(வெந்தயம்,பாகற்காய்,கற்றாழை,இஞ்சி,பொடி வகைகள் :வேப்பம் பொடி , வெந்தயம் பொடி, நாவல் பழக்கொட்டை பொடி,வைட்டமின் சி:ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய்) சர்க்கரை கட்டுக்குள் இருக்க மருந்துகளோடு உணவு முறையும் அவசியம். மேற்கண்ட இந்த குறிப்புகளையும் பின்பற்றுவதன் மூலம் ரத்த சர்க்கரை அளவு நிச்சயம் குறையும்.