சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று அருளாசி வழங்கினார். அந்த இரவே `சிவராத்திரி’ என வழங்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்று கூறப்படுவது உண்டு.
பிரளய காலத்தில் பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டன. இதையொட்டி, இரவு பொழுதுகளில் பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தார். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி சிவனுக்கு அர்ச்சனை செய்து வந்தார். பூஜையின் முடிவில் , தங்களை வணங்கி பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தால், அதாவது 'சிவராத்திரி' என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொண்டார்.
நான்கு ஜாம பூஜைகள்:
முதல்ஜாம பூஜை, படைக்கும் கடவுளான பிரம்மா சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். சிவாலயங்களில் முதல் கால பூஜையின்போது ரிக் வேத பாராயணம் செய்வார்கள். முதல் கால சிவராத்திரி பூஜை, பிறவிப் பிணிகளில் இருந்து முக்தி தரும்.
இரண்டாவது ஜாம பூஜை, சிவராத்திரியன்று இரவு செய்யப்பட்டும் பூஜை ஆகும். காக்கும் கடவுள் விஷ்ணு கால பூஜையின்போது யஜுர்வேத பாராயணம் செய்வது சிறப்பு.
சக்தியின் வடிவமான அம்பாள், ஐயனை பூஜிப்பதால் விஷேசமானது அதுவே மூன்றாம் ஜாம பூஜை எனப்படும். இது லிங்கோத்பவ காலம் ஆகும். இந்த சமயத்தில் தான் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் முயற்சி செய்த காலம்.
முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் நான்காம் ஜாம பூஜையின்போது சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். இந்த பூஜையின்போது அதர்வண வேதப் பாராயணம் செய்வது சிறப்பு.