ரிசர்வ் வங்கியின் ரீடைல் டைரெக்ட் திட்டத்தின் மூலம் சாமானிய மக்கள் பங்குச்சந்தையில் எப்படி நேரடியாக முதலீடு செய்கிறார்கள் அதேபோல் அரசு பத்திரத்திலும் முதலீடு செய்ய முடியும்.
ரீடைல் முதலீட்டாளர்கள் அரசு பத்திரத்தில் நேரடியாக முதலீடு செய்ய வாய்ப்பை உருவாக்கித் தரும் ஒரு முக்கியமான திட்டம் தான் ரிசர்வ் வங்கியின் ரீடைல் டைரெக்ட் ஸ்கீம் (RBI Retail Direct scheme). இத்திட்டத்தின் மூலம் ஒருவர் ஆன்லைன் மூலம் அரசு பத்திரத்தை வாங்கவோ விற்பனை செய்வோ முடியும்.
ரிசர்வ் வங்கி ரீடைஸ் டைரெக்ட் திட்டத்திற்காக அரசு பத்திரங்களை வாங்கவும், விற்கவும் https://www.rbiretaildirect.org.in/ என்ற வெப்சைட் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தத் தளம் மூலம் முதலீட்டாளர்கள் ப்ரைமரி மற்றும் செக்ன்டரி தளத்தில் அரசு பத்திரங்களை வாங்க முடியும்.
பொதுவாகவே அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் நிறுவனமோ அல்லது அமைப்போ GILT கணக்கு திறக்க வேண்டும். இதேபோல் தற்போது ரீடைல் முதலீட்டாளர்கள் அரசு பத்திரத்தில் முதலீடு செய்ய ரிசர்வ் வங்கியிடம் Retail Direct Gilt (RDG) Account-ஐ திறக்க வேண்டும்.
சிறுமுதலீட்டாளர்கள் பங்கேற்க வழி இருந்தாலும், பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.இந்நிலையில், தற்போது சிறுமுதலீட்டாளர்கள் நேரடியாக அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய, ‘ரீடைல் டைரக்ட்’ மேடை மூலம் கணக்கு துவக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. சிறுமுதலீட்டாளர்கள் அரசு பத்திரங்களை வாங்குவது எளிதாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீண்ட கால நோக்கில் முதலீட்டை நாடும், வட்டி வருமானம் எதிர்பார்க்கும் ஓய்வு பெற்ற நபர்கள் உள்ளிட்டோருக்கு, இந்த முதலீடு ஏற்றதாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த பத்திரங்களின் தன்மையை முழுவதுமாக புரிந்து கொண்டு இதில் முதலீடு செய்யலாம். மியூச்சுவல் பண்ட்கள் வாயிலாக இவற்றில் முதலீடு செய்யும் வாய்ப்பும் இருக்கிறது.