இனிப்பு சுவை கொண்ட உணவுகள், பானங்களை விரும்பாத மனிதர்கள் வெகு குறைவு. நமது நாட்டில் பராம்பரிய விழாக்கள் பலவற்றிலும் இனிப்பு சுவை சார்ந்த பல உணவுகள் இடம்பெறுகின்றன. அதிலும் தமிழர்களின் திருநாளான பொங்கல் திருநாள் அன்று நாம் அனைவரின் நினைவில் தோன்றுவது கரும்புதான். கரும்பில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. ஆனால் அதன் உண்மையான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. அதனால் தான் பலரும் கரும்பு சாப்பிடாமல் இருக்கின்றனர்.
கரும்பில் சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால், சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதற்கு காரணம், பிலிரூபின் இரத்தத்தில் கலந்திருப்பதே ஆகும். இதுமட்டுமல்லாது, மோசமான கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் பித்த நாளங்களில் அடைப்பு போன்றவைகளும் மஞ்சள் காமாலையை உண்டாக்கும். எனவே மஞ்சள் காமாலையிலிருந்து உடனே குணமாவதற்கு, இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடித்து வந்தால் போதுமானது.
கரும்பு ஏராளமான தாது சத்துகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. கரும்பு சாறு பருகும் நபருக்கு உடலில் சீக்கிரத்திலேயே புத்துணர்ச்சியும், உற்சாகமும் தருகிறது. உடனடி ஆற்றளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக கரும்பு சாறு இருக்கிறது. அடிக்கடி கரும்பு சாறு பருகினால் உடல் மற்றும் மனம் மிகுந்த உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கும்.
உடலில் உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்றுநோய்களினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். இத்தகையவற்றை சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், அவை சரியாகிவிடும்.
வயிற்றில் பிரச்சனை இருக்கும் நபர்களுக்கு வாய் துர்நாற்ற பிரச்சனை ஏற்படவே செய்யும். வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும் பச்சத்தில் தினமும் கரும்பை பச்சையாக சாப்பிடவோ அல்லது கரும்பு சாற்றையோ பருக வேண்டும். கரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமங்களை கொண்டிருக்கிறது, இது உங்கள் பற்களின் பற்சிப்பியை உருவாக்க உதவுகிறது.வாய் துர்நாற்ற பிரச்சனையையும் போக்குகிறது.
இன்றைய காலங்களில் பலருக்கும் உணவு செரிமானமின்மை மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. இவர்கள் கரும்பு சாறு தினமும் அருந்த வேண்டும். கரும்பு சாற்றில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றின் அமில சுரப்பு அளவுகளை சமன்செய்ய உதவுகிறது மற்றும் செரிமான சாறுகள் சுரக்கவும் உதவுகிறது.
கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான். பொதுவாக இந்த கற்கள் உடலில் ஏற்படும் வறட்சியினால் ஏற்படும். அதற்காகத் தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் அவை அந்த கற்களை உடைத்து வெளியேற்றிவிடும். எனவே தண்ணீர் மட்டுமின்றி, கரும்பு சாற்றையும் குடித்தால், அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்துவிடும்.
கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.
கரும்பு சாறு நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதாக அறியப்படுகிறது. தினமும் காலையில் கரும்பு சாறு அருந்தும் நபர்களுக்கு உடலில் கொழுப்பு கரைந்து வெகு சீக்கிரத்தில் உடல் எடை குறைய செய்கிறது.
வெயில்காலங்களில் உடல் அதிகம் உஷ்ணமடைந்து பலரும் உடல் எரிச்சல் பிரச்சனையால் மிகவும் அவதிப்படுவர். உடல் எரிச்சல் நீங்கி, உடல் குளிர்ச்சி பெற தினமும் கரும்பு சாறுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் .மேற்கூறிய பலன்களை பெற முடியும்.