கடல் நீர் உப்பாக இருப்பது ஏன்?

கடல் பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கிறது. ஆனால், கடல் நீரை ஒரு கையில் எடுத்து, நீங்க வாயில் வைத்தால் வயிறு குமட்டும் அளவுக்கு உப்பு கரிக்கும்.


உலகில் இருக்கிற எல்லா கடல் நீரும் இப்படித்தான் உப்புத்தன்மை ஒரே அளவில் இருப்பதில்லை.சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆராய்ச்சியாளர் உலகில் உள்ள 77 வேறு வேறு கடல்களிலிருந்து நீர் மாதிரி எடுத்து சேகரித்தார்.கடல் நீர் அடையின் அளவில் சராசரியாக 3.5 சதவீத அளவுக்கு பல்வேறு உப்புக்கள் கலந்துள்ளதாக அவர் கண்டறிந்தார். 

அதாவது ஒரு லிட்டர் கடல் நீரில் 3.5 கிராம் அளவுக்கு உப்பு உள்ளது. எனினும், ஐரோப்பிய  கடலில் உப்புத்தன்மை சற்று குறைவாகவே இருக்கிறது. இதற்கு நேர் எதிராக செங்கடலில் உப்புத்தன்மை அதிகமாக இருக்கிறது ஆனால் தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக்கடலில் உப்புத்தன்மை சற்று குறைவாக உள்ளது.கங்கை பிரம்மபுத்திரா மகாநதி போன்ற பல நதிகள் கடலில் வந்து கலப்பதே இதற்கு காரணம்.

நிலத்தில் விழும் மழை நீரில், வளி மண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைட்டில் சிறிதளவு கலக்கிறது.இதனால் மழை நீர் சிறிதளவு கார்பானிக் அமிலத் தன்மையை அடைகிறது.

சிறிதளவு அமிலத் தன்மை உடைய மழை நீர் பாறைகளின் மீது கடந்து வரும் போது, பாறைகளை அரிக்கிறது. இந்நிகழ்வின் போது ஏற்படும் வேதி மாற்றத்தால் மின்னூட்டம் பெற்ற அணுத்துகளகள் அதாவது அயனிகள் உருவாகின்றன. இந்த அயனிகள் மழை வெள்ளத்தால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறுதியில் கடலில் உள்ள உயிரினங்கள் பயன்படுத்திக் கொண்டாலும் பெரும்பான்மையான பகுதி கடலிலேயே தங்கி விடுகிறது.


இந்த அயனிகளில் 90% சோடியம் மற்றும் குளோரைடு ஆகியவற்றை உள்ளடக்கியது. சோடியம் மற்றும் குளோரைடு உப்புத்தன்மை உடையது.

பல கோடி ஆண்டுகளாக இவ்வாறு ஆறுகளில் இருந்து,கடலுக்கு அடித்து வரப்படும் அயனிகள்,கடலிலேயே தங்கி விடுவதால், கடல் நீர் உப்பாக இருக்கிறது.

பல கோடி ஆண்டு இவ்வித நதிகள் அடித்து செல்லப்பட்ட உப்பு கடலில் போய் சேர்ந்துள்ளது. சூரிய வெப்பம் காரணமாக கடலில் உள்ள நீர் ஆவியாகி மேகங்களாக உருவெடுக்கின்றன. கடல் நீர் ஆவியாகும்போது உப்பு பின்தங்கி விடுகிறது. இவ்வித உப்பு பின்தங்கி விடுவதால்  மழைநீர் உப்பு கரிப்பது இல்லை.