கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்

கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகை கறிவேப்பிலை இலையாகும். “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது. நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும். இந்தக் கறிவேப்பிலை புதர்ச்செடி அல்லது குறுமரம் வகையைச் சேர்ந்தது. தண்டு மற்றும் கிளைகளின் இடையில் கறிவேப்பிலை இலைகள் கொத்தாக வளர்கின்றன. 


இந்தக் கறிவேப்பிலை பார்ப்பதற்கு சிறியத் தோற்றத்தினைக் கொண்டிருந்தாலும் இவற்றில் புதைந்துள்ள நன்மைகள் ஏராளம். ஆனால் இந்தக் கறிவேப்பிலையின் நன்மைகள் ஒருசிலர் தெரியாமல் உண்ணாமல் அவர்கள் உண்ணும் சாப்பாட்டிலிருந்துத் தூக்கி எறிந்து விடுகிறார்கள்.

கறிவேப்பிலை சமைக்கும் போதும் மட்டுமல்லாமல் பச்சையாக இருக்கும் போதே நல்ல வாசனை அளிக்கக் கூடியது. கறிவேப்பிலையில் மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரல் போன்ற தாதுசத்துகளும், வைட்டமின் ஏ,பி,சி, இ, அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள், ஃப்ளேவ னாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடண்ட், கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்துகளும் நிறைந்திருக்கின்றன. 

நன்மைகள்:

  • புற்றுநோய் உண்டாவதை தடுக்கவும் கறிவேப்பிலை சிறப்பாக செயல்படுகிறது. ஃபீனால் என்னும் வேதிப்பொருள் கறிவேப்பிலையில் மிகுந்திருக்கிறது. இவை குடல் புற்றுநோய் செல்களை வரவிடாமல் தடுக்கிறது. அதை எதிர்த்து போராடக்கூடிய கார்பாஸோல் ஆல்கலாய்டுகள் கறிவேப்பிலையில் அதிகமாகவே உள்ளது. 
  • இன்று செரிமானப் பிரச்சனையால் அவதிப்படும் பலருக்கும் கறிவேப்பிலை நல்ல தீர்வாக இருக்கும். செரிமான பிரச்சனை அதை தொடர்ந்து வயிறு மந்தமாக இருப்பது, பிறகு மலச்சிக்கல் என்று சிக்கல் மேல் சிக்கலாக அவதிப்படுபவர்கள் கறிவேப்பிலையை சாப்பிட்டால் செரிமானம் தூண்டப்படும். 
  • அழகு குறிப்பிலும் கறிவேப்பிலை பயன்பாட்டுக்கு சிறப்பான இடம் சொல்லலாம். கூந்தல் பிரச்சனையான முடி உதிர்வு, இளநரை, வறட்சியான கூந்தல், அடர்த்தி குறைவு இப்படி இருக்கும் அத்தனையும் சேர்த்து தீர்ப்பதில் மிக முக்கிய பங்கு இதற்கு உண்டு. கறிவேப்பிலை அப்படியே அரைத்து தலையில் தேய்த்து வந்தாலே முடிக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைவாக கிடைத்துவிடும். 
  • கறிவேப்பிலையில் உள்ள பலவிதமான நன்மைகள், சர்க்கரையின் அளவை ரத்தத்தில் சீராக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் இது செய்ய சில காலங்கள் எடுக்கும். சிறுவயதில் இருந்தே இது போன்ற இயற்கையான விஷயங்களை நாம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதிகள் போன்ற பிரச்சினைகள் நமக்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை.

  • பலவிதமான ஆராய்ச்சிகளிலும் கறிவேப்பிலை என்பது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது என்று கூறுகின்றனர்.கறிவேப்பிலையில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கிறது. எனவே இது கொலஸ்ட்ரால் உள்ள எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகிறது.கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து விட்டாலே இயற்கையாகவே நல்ல கொலஸ்ட்ரால் என்பது அதிகரித்துவிடும். எனவே நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் எச்டிஎல் நம் உடலில் அதிகரிக்கவும் இது உதவி செய்கிறது. 
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கறிவேப்பிலை உதவுகிறது. 
  • கறிவேப்பிலையில் இருக்கும் வைட்ட மின் ஏ கண்களை பாதுகாக்க உதவுகிறது, இவை கரோட்டினாய்டு பாதிப்பை வராமல் தடுக்கும். பார்வை குறைபாட்டை உண்டாக்காமல் காக்கும்.
  • இதிலிருக்கும் வைட்டமின் சி கல்லீரலை பலப்படுத்துகிறது. கல்லீரலில் இருக்கும் செல்களை பாதுகாத்து கல்லீரலை ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது.