பாசிப்பயறு நன்மைகள்

புரதங்கள் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட சூப்பர் ஃபுட் என்றால் அது இந்த பாசிப்பயறு தான். நம் இந்திய சமையலில் இந்த பருப்பு மிகவும் புகழ் பெற்றது. மற்ற பருப்புகளை ஒப்பிடும் போது பாசிப்பருப்பு உங்களுக்கு அதிகளவு புரோட்டீன்கள் நிறைந்த ஒன்று. வெறும் 100 கிராம் பாசிப்பருப்பில் 3 கிராம் அளவிற்கு புரோட்டீன்கள் காணப்படுகின்றன. 


நன்மைகள்:

பாசிப் பயரில் பொட்டாசியம் மிக அதிகமாக உள்ளது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.மேலும், இரத்தக் கொழுப்பின் அளவைக் குறைக்க பாசிப் பயறு உதவும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.எனவே, பாசிப்பயிறை வழக்கமாக உட்கொள்வது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

நமது உடல் செயல்பாடுகளுக்கு இரும்புச்சத்து ஒரு இன்றியமையாத தாது உப்பு ஆகும். இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்த சோகை ஏற்படலாம்.பாசிப் பயிறு நிறைய இரும்புச் சத்தை கொண்டுள்ளது. எனவே, பாசிப் பயிறை வழக்கமாக உட்கொள்வது இரத்த சோகையைத் தடுக்க உதவும்.

கோலிசிஸ்டோகினின் ஹார்மோனின் செயல்பாட்டை மேம்படுத்த பாசிப் பயிறு உதவுகிறது. இதை சாப்பிட்ட பிறகு உங்களுக்கு பசிக்காது. வயிறு நிரம்பிய எண்ணத்தை ஏற்படுத்தும். வளர்ச்சிதை மாற்றத்தை நிர்வகிக்க உதவுகிறது. மேலும் உங்க எடையை கட்டுக்குள் வைக்க பாசிப் பயிறு உதவும்.

இந்த பாசிப் பயிறில் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் அடங்கி உள்ளன. பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச் சத்து மற்றும் காப்பர் போன்ற அனைத்து வகையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன. இதைத் தவிர போலேட், நார்ச்சத்துக்கள், விட்டமின் பி6 மற்றும் புரோட்டீன்கள் போன்றவைகளும் காணப்படுகிறது.


இதிலுள்ள விட்டமின் பி காம்ப்ளக்ஸ் உங்க கார்போஹைட்ரேட்டுகளை குளுக்கோஸாக உடைக்க பயன்படுகிறது. இது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. இதில் உள்ள ஃபோலிக் அமிலம் ஆரோக்கியமான மூளை செயல்பாட்டையும் டி.என்.ஏ உற்பத்தியையும் பராமரிக்க உதவுகிறது. 

பாசிப்பயிறு குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது. இது உடலில் உள்ள இன்சுலின், இரத்த குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது.இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது, மேலும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

பாசிப் பயிறில் ஃப்ளோனாய்டுகள் (Flavanoids) போன்ற ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன.இந்த ஆன்டிஆக்சிடன்ட்டுகள் புற்றுநோய் செல் உருவாவதற்கு எதிராக செயல்படுகின்றன.எனவே, பாசிப் பருப்பை வழக்கமாக உட்கொள்வது புற்றுநோயின் அபாயத்தை குறைக்க உதவும்.