யானைகளின் வாழ்க்கை முறையே பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

 உலகின் சக்திவாய்ந்த மிருகங்களுள் யானை மிகவும் முக்கியமானதாகும். பார்ப்பதற்கு அழகான மற்றும் கம்பீரமான யானை இயற்கையின் உன்னதமான படைப்புகளில் ஒன்றாகும். யானைகளின் வாழ்க்கை முறையானது பல்வேறு சுவாரஸ்யங்களைக் கொண்டது.



யானைகளில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை ஆஃப்ரிக்க யானைகள், ஆசிய யானைகள்.மேலும் ஆஃப்ரிக்கா யானைகளுடன் ஒப்பிடுகையில் ஆசிய யானைகள் உருவத்தில் சற்றே சிறியது.


யானைகள் வித்தியாசமானவை மற்றும் புத்திசாலியானவை என்பதை அவற்றின் நடவடிக்கைகளில் வெளிப்படுத்துகின்றன.அப்படிபட்ட இந்த யானைகளை பற்றி 10 சுவராஸ்யமான தகவல்களை பற்றியது தான் இந்த பதிவு 

1. யானைகளுக்கு நீச்சல் தெரியும்
யானைகளுக்கு தண்ணீர் என்றால் போதும் தண்ணீரில் ஆட்டம் போடுவது மட்டுமில்லமால் தண்ணீரை உடல் முழுவதும் பீய்ச்சி அடிக்கும். அதுமட்டுமில்லாம் எவ்வளவு அழமான எரியாக இருந்தாலும் எளிதாக நீத்தக்கூடியது


 


2. யானையின் தோலுக்கு இவ்வளவு உணர்ச்சியா!!
யானை மிகுந்த உணர்திறன் கொண்டது. யானையின் தோல் எவ்வளவு தடிமனாக இருந்தாலும் ஒரு சிறிய ஈ தன் மீது அமர்வதை கூட அது உணர்ந்து கொள்ளும் .யானையால் அதிக வெப்பத்தை தாங்க முடியாது அதனால் தான் வெயிலில் இருந்து காத்து கொள்ள மணலை தன்மீது போடுகின்றது.

 

3. இரண்டு வருடங்கள் கர்ப்பம்
பாலூட்டி வகைகளிலேயே மிக அதிக காலம் கர்ப்பமாக இருப்பது யானை மட்டும் தான். சுமார் 22 மாதங்களுக்கு பிறகு தான் குட்டியை ஈனும். மேலும் யானையின் ஆயுட்காலம் 60 ஆண்டுகள் என்கிற போது ,பெண் யானை 50 ஆண்டுகள் வரை கர்ப்பம் தரித்து குட்டியை ஈனும்.
 

4. யானை துதிக்கையில் எவ்வளவு ரகசியம்
மனிதனின் மொத்த உடலில் உள்ள சதையைவிட யானையின் தும்பிக்கையில் அதிக சதை உள்ளது. மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. யானைகள் காற்றில் வரும் வாசனையைக் கொண்டு சுற்றுபுறத்தை  அலசுகின்றன.மேலும் அங்கு வேட்டை விலங்குகள் அருகில் இருந்தால் அவ்விடத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான வேறு இடத்துக்குச் சென்று விடும்.


5. யானைகளின் தூக்க நேரம்
ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மனிதர்களுக்கு எட்டு மணி நேர தூக்கம் அவசியம், ஆனால் யானைகள் மிகவும் நெகிழ்வானவை. அவர்கள் இரவுக்கு நான்கு மணிநேரம் மட்டுமே தூங்குகிறார்கள், அவர்கள் பாதி தூக்கத்தில் கூட எழுந்து நிற்கிறார்கள். அவற்றின் ஆழமான தூக்கத்திற்கு அவர்களுக்கு ஆழ்ந்த முயற்சி தேவை.



6. யானையின் தந்தம் உடைந்தால் வளரக்கூடியது
யானையிடம் இருக்கும் கூர்மையான ஆயுதம் அதன் தந்தம் தான் அது சுமார் 90கிலோகிராம் எடை கொண்டது வெட்டுப்பற்கள் தான் வளர்ந்து தந்தமாகிறது. சில நேரங்களில் சண்டையின் போது தந்தங்கள் உடைய கூடும் . பாதியளவு தந்தம் உடைந்தால் மீண்டும் வளரும் முழுவதுமாக உடைந்தால் மீண்டும் வளராது . பெண் ஆசிய யானைக்கு தந்தம் இருக்காது


7. யானையின் பிளிறல்
யானை பல வகையான ஒலியை எழுப்பக்கூடியது. சந்தேசமாக இருக்கும் போதும் ,துன்பத்திலும் ஆக்ரோஷமாக இருக்கும் போதும் துதிக்கையை தூக்கி ஒளியை எழுப்பும் இந்த ஒளி 9கி.மீக்கு அப்பால் உள்ள மற்றொரு யானையாலும் கேட்க முடியும்

8. யானை குடும்பமாக வாழும் உயிரினம்
பெண்யானை தான் குடும்பத்தை வழிநடத்தும் மேலும் கூட்டமாக தான் வாழும். ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் ஆண் யானை தனிமை படுத்தப்படுகிறது. இனப்பெருக்கத்திற்காக கூட்டத்திலிருந்து பிரிந்து செல்லும்.

 

9. யானை தன்னை எப்படி அடையாளம் கண்டுகொள்ளும்
உலகில் வாழும் உயிரினங்களில்,கண்ணாடியை பார்த்து தன்னை அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய உயிரினங்கள் வெறும் ஐந்து தான்.அவை குரங்குகள்,மாக்பை எனப்படும் ஒரு வகை பறவை, டால்ஃபின்,மனிதர்கள் தவிர தன்னை அடையாளம் கண்டு கொள்ளும் அறிவு யானைக்கு உண்டு


10.சக்திவாய்ந்த நினைவாற்றல்
யானைகளுக்கு பெரிய உடல்கள் மட்டுமல்ல, ஐந்து கிலோகிராம் எடையுள்ள மூளையும் உள்ளன, எனவே அவை மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகள் என்பதில் ஆச்சரியமில்லை. அவற்றின் பெரிய அளவு மற்றும் மூளைத் திறனைக் கொண்டு, அவர்கள் தகவல்களைச் சேமித்து, பல ஆண்டுகளாக விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளலாம், அவற்றின் உயிர்வாழ்வதற்கான தேவையான திறன்கள் மட்டுமல்ல, சமூகக் கற்றலுக்கும் அவற்றின் மூளை பயன்படுகிறது. யானைகள் மற்ற நபர்களை நினைவில் வைத்திருக்கின்றன, மேலும் பல வருடங்கள் கழித்து கூட அவர்களை மீண்டும் சந்திக்கும் போது அவர்களை அடையாளம் காண முடியும்.


உலகில் இப்போது 4,15,000 ஆஃப்ரிக்க யானைகள் உள்ளன. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. எண்ணிக்கையில் பார்ப்பதற்கு அதிகமாக தெரிந்தாலும், இவை அழிந்து வரும் விலங்கினமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் வேட்டையாடுதல் தான்.