அகத்தி கீரையின் வகைகள் மற்றும் மருத்துவ குணங்கள்


 கீரைகள் என்றாலே பல்வேறு மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள் இயற்கையாகவே உள்ளதால் தான் அனைத்து மருத்துவர்களும் கீரைககளை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். கீரைகளில் பல வகை இருப்பினும் ஒவ்வொருன்றுக்கும் ஒரு தனித்துவம் உள்ளது.அகத்திக்கீரை சிறந்த மருத்துவ குணங்கள் கொண்ட கீரையாகும். உடலுக்கு குளிர்சியளிக்கும் கீரையும் கூட.கசப்பு சுவைமிக்க அகத்திக்கீரையின் சுவையை பெரும்பாலும் பலரும் விரும்புவதில்லை.

 அகத்தை சுத்தப்படுத்துவதால்  அகத்தி கீரை என அழைக்கின்றனர். வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு. அகத்திக் கீரை நாடு முழுவதும் பயிரிடப்படுகிறது. இருப்பினும் இதன் தாயகம் மலேசியா.அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருள்படும். 


அகத்தி கீரையின் வகைகள்

அகத்தியில் வெள்ளை அகத்தி, செவ்வகத்தி, சாழை அகத்தி, பேரகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என 5 வகைகள் உள்ளன.  உணவாக உட்கொள்ளும் அகத்தியில் இரண்டு மட்டுமே, ஒன்று வெள்ளை நிறப் பூக்களை கொண்டது.இது பொதுவாக அகத்தி என்ற பெயரில் குறிப்பிடுவார்கள். மற்றொன்று செந்நிறப் பூக்களை உடையது இதனைச் செவ்வகத்தியென குறிப்பிடுவர். 

அகத்தி கீரையில் உள்ள சத்துக்கள்

அகத்தி மரத்தின் வேர், பூ, இலை மற்றும் பட்டை என அனைத்து பகுதிகளும் மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளன. நவீன காலத்தில், அகத்தி கீரையில், 8.4 சதவீதம் புரதமும், 1.4 சதவீதம் கொழுப்பும், 3.1 சதவீதம் தாது உப்புகளும் இருப்பதாக வேளாண் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புகள், மாவுச்சத்து.. இரும்புச்சத்து. வைட்டமின் ஏ, வைட்ட்மின் சி சத்துகள் நிறைந்திருக்கின்றன. சித்தமருத்துவத்தில் 63 வகையான சத்துகள் அகத்தி கீரையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது

அகத்தி கீரையின் பயன்கள்:

வயிற்று புண்

 உணவுக்குழாய், இரைப்பை,சிறுகுடலின் உட்சுவரில் உண்டாகும் புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது அகத்திகீரை. உடல் உஷ்ணத்தால் உண்டாகும் வயிற்று புண்களையும் ஆற்றும்.சுத்தம் செய்யப்பட்ட கீரையுடன் சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டுவந்தால், வயிற்றுப்புண் சரியாகும்.

கண்கள் குளிர்ச்சி அடையும்


இன்று சிறுவர்கள் முதல் பெரியர்வகள் வரை அனைவரும் கணினி , கைப்பேசி போன்றவற்றை ஒரே இடத்தில அமர்ந்து பயன்படுத்துவதால் கண்களில் வறட்சி ஏற்படும் .இதனை சரி செய்ய அகத்தியை பயன்படுத்தி வர கண்கள் குளிர்ச்சி அடையும் பார்வை தெளிவாகும்.

இரத்த கொதிப்பு

வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு ரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கிறது. அகத்தி கீரையில்-16.22 சதவீதம் வைட்டமின் சி உள்ளது. இது ரத்த குழாய்கள் தடிமன் ஆவதை தடுத்து நிறுத்துகிறது.அகத்திக்கீரையை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால், இரத்த கொதிப்பு ஏற்படாது.அகத்தியில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு, சிறுநீரும் தடை இல்லாமல் செல்லவழி வகுக்கும் ..


 தலைவலி 

ரைபோப்ளேவின் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு தலைவலி அதிகமாக இருக்கும். அடிக்கடி வரும் 200-400மிகி ரைபோப்ளேவின் எடுத்துக் கொண்டால் இதற்கு நல்ல தீர்வு. அகத்தி இதற்கு உறுது ணையாக இருக்கும்.

தோல் நோய்களுக்கு

அகத்தி கீரையுடன் சிறிது மஞ்சள் , அகத்தி இலை மற்றும் மருதாணி இலை இவை அனைத்தும் ஒரு சேர அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில தடவி வந்தால் பித்த வெடிப்பு இருந்த இடம் காணாமல் போகும்.அகத்தி கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து, கரும்பட்டை, தேமல், சொரி, சிரங்கு உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் முழுமையாக குணமடையும்.

நுரையீரலை பாதுகாக்கும்


புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் புகைப்பிடிக்கும் போது புகையில் இருக்கும் நிகோடினை உடல் உறிஞ்சும். இவை சுவாசக்குழாய் வழியாக கிரகிக்கப்பட்டு மூச்சுகுழாயில் பயணித்து நுரையீரலில் தங்கி விடும்.அகத்திக்கீரையை கசப்பு நீக்காமல் பருப்பு தேங்காய் சேர்த்து தேங்காய் எண்ணெயில் பொரியல் செய்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டாலே நுரையீரலில் இருக்கும் நச்சை வெளியேற்றும்.  பீடி, சிகரெட் போன்ற புகைப்பழக்கம் உள்ளவர்கள் இந்தப் பூவை சமைத்துச் சாப்பிட்டு வந்தால், அவர்கள் உடம்பில் உள்ள விஷம் மலத்துடன் வெளியேறும்.