எலுமிச்சையின் நன்மைகள்


 எலுமிச்சை நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கம். எலுமிச்சை மட்டுமல்ல, அதன் தோல் அத்தனை மருத்துவக் குணங்கள் கொண்டது. அந்த மகிமை தெரிந்துதான் நம் முன்னோர்கள் எலுமிச்சையைத் தோலோடு சேர்த்து ஊறுகாயாகத் தயாரித்தார்கள்.

இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் மற்றும் கூந்தலுக்கு நிறைய நன்மைகளைத் தருவதோடு, துணிகள் மற்றும் பாத்திரங்களில் இருக்கும் கறைகளை நீக்கவும் பயன்படுகிறது.நமது நாட்டில் உணவு முறைகளில் ஆறு சுவைகள் இடம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாக கருதப்படுகிறது. அதில் ஒன்று புளிப்பு சுவை ஆகும். நம் நாட்டில் புளியம் பழங்கள் உணவுக்கு உபயோகப்படுத்துவதற்கு முன்பாக உணவில் புளிப்பு சுவைக்கு எலுமிச்சை சாறு மட்டும் எலுமிச்சம் பழச்சாறு அதிகம் பயன்படுத்தப்பட்டது.

எலுமிச்சையின் நன்மைகள்:
உடல் எடை குறைய

எலுமிச்சை ஜூஸை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடை குறையும்.உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு ஒரு தினமும் காலையில் இளம் சூடான நீரில், சிறிது எலுமிச்சம் பழ சாறு பிழிந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலின் வளர்சிதைமாற்றத்திறன் அதிகரித்து, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, உடல் எடை வெகு சீக்கிரமாக குறைய வழி வகை செய்கிறது.

ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும்

எலுமிச்சையின் ஒரு சிறந்த  யாருக்கும் தெரியாத நன்மை என்று சொன்னால், அது எலுமிச்சை இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையுடையது என்பது தான்.எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.ரத்த அழுத்தம் சீராக இருந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஒமத்தை எலுமிச்சை சாற்றில் சேர்த்து குடித்தாலும், செரிமானப் பிரச்சனையை சரிசெய்யலாம்.

புற்றுநோய்


எலுமிச்சைத் தோலிலிருக்கும் `ஃப்ளேவனாய்டு’ (Flavonoid), வைட்டமின் சி-ஐ உள்வாங்கிக் கொள்ளும் திறனை அதிகரிக்கச் செய்யும். இதிலுள்ள `நரிஞ்ஜெனின்’ (Naringenin) என்ற ஃப்ளேவனாய்டு, டி.என்.ஏ-வைப் பாதுகாத்து கேன்சர் வராமல் தடுக்க உதவும். இது பாதிப்படைந்த டி.என்.ஏ-வைச் சரிசெய்யவும் உதவும். எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளன. இந்த சத்துக்கள் நமது ரத்தத்தில் உருவாகும் ஃப்ரீ ரேடிக்கல்களை அணுக்களை உருவாகாமல் தடுத்து, புற்றுநோய் ஏற்படாமல் காக்கிறதுபெண்கள் எலுமிச்சை சாற்றை அதிகம் குடித்தால், எலுமிச்சையில் இருக்கும் கார்சினோஜென் பெருங்குடல், புரோஸ்ட்ரேட் அல்லது மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.பெண்கள் எலுமிச்சை சாற்றை அதிகம் குடித்தால், எலுமிச்சையில் இருக்கும் கார்சினோஜென் பெருங்குடல், புரோஸ்ட்ரேட் அல்லது மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.

சிறுநீரக கற்கள் கரைய

சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்க நினைப்பவர்கள், ஏற்கனவே சிறுநீரகக் கற்கள் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் தினமும் எலுமிச்சம் பழ சாற்றை காலையில் அருந்தி வந்தால் வெகு விரைவில் அவர்கள் சிறுநீரகத்தில் உருவாகியிருக்கும் சிறுநீரகக் கற்களைக் கரைத்து, அவற்றை சிறுநீர் வழியாக வெளியேற்றி சிறுநீரக அறுவை சிகிச்சை நோய் ஏற்படாமல் செய்கிறது.


 முகப்பருவைப் போக்கும்!

எலுமிச்சைத் தோலையும், கொஞ்சம் புதினா இலையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசிக்கொள்ளலாம். எலுமிச்சைத் தோலிலிருக்கும் எண்ணெய் சருமத்தைச் சுத்தப்படுத்த உதவும், புதினா இலை முகத்தைப் பொலிவாக்க உதவும். எலுமிச்சை சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக சருமத்தில் பருக்கள் இருப்பவர்கள் பயன்படுத்தினால், விரைவில் அதனை நீக்கலாம். 

எலும்புகள் வலிமை பெற

எலும்புகள் வலிமையாக இருக்க நமது உணவில் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்கள் அதிகம் தேவைப்படுகின்றன. எலுமிச்சை பழத்தில் இந்த அத்தனை சத்துக்களும் அதிகம் நிறைந்திருக்கிறது.

ஷெமிக் ஸ்ட்ரோக்

ஷெமிக் எனப்படும் ஒருவகையான வாத நோய் பெண்களுக்கு அதிகம் ஏற்படுறதுஎலுமிச்சம் பழச்சாறு மற்றும் எலுமிச்சம் பழம் சேர்த்து செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட பெண்களுக்கு ஷெமிக் ஸ்ட்ரோக் எனப்படும் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு வெகுவாகக் குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர்