தினமும் உணவில் "நெய்" சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்

 நமது நாட்டின் பாரம்பரியமான மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் தாவரங்கள், மூலிகைகள் போன்றவற்றின் மருத்துவ குணங்களை பற்றி மட்டும் கூறாமல் விலங்குகளிலிருந்து பெறப்படும் பொருட்களால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றியும் கூறியிருக்கின்றனர். அந்த வகையில் அக்காலம் முதலே பசும்பால் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களையும் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அந்தப் பசும்பாலில் இருந்து வெண்ணையை கடைந்தெடுத்து, அதை உருக்கி நெய் தயாரிக்கப்படுகிறது. நெய் பல அற்புதமான மருத்துவ குணங்கள் இருப்பதை கண்ட நம் முன்னோர்கள் அதை உயர் தரமான உணவுபொருளாகவும் மற்றும் பல்வேறு நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தினர். 

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு, நெய் ஒரு சிறந்த வழி. ஏனெனில் அவர்கள் வெண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயமின்றி சாப்பிடலாம். வெண்ணெயுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது. இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைந்துவிடும்.

 

இது மூட்டு இணைப்புக்கள் மற்றும் திசுக்கள் தொய்வடைவதைத் தடுத்து தடுத்து, மூட்டு வலி மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

செல்களின் இயக்கம் ஆயுர்வேதத்தின் படி, நெய்யை ஒருவர் வெறும் வயிற்றில் எடுக்கும் போது, அது உடலினுள் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஊட்டமளித்து சீராக இயங்கச் செய்யுமாம். ஆகவே உடற்செல்கள் புத்துணர்ச்சி பெறவும், ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாகவும் செயல்படும். 

வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும். இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூண்டும்.


பெரும்பாலானோர் நெய் உடல் பருமனை அதிகரிக்க மட்டுமே செய்யும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தினமும் காலையில் 1 ஸ்பூன் நெய் உட்கொள்வதால், உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு உடல் எடை தான் குறையும். தலைமுடி உதிர்வு நெய்யை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், தலைமுடி உதிர்வதும் தடுக்கப்படும்.


நெய்யில் புற்றுநோய் செல்களை அழிக்கும் உட்பொருட்கள் உள்ளது. ஆகவே ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் நெய்யை சாப்பிட புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். உடல் செயல்பாட்டுக்கு சில கொழுப்பு சத்துகள் தேவை, அதை நெய் சாப்பிடுவதால் பெறலாம். நெய்யானது உடல் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, தினமும் உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.

ஆயுர்வேதத்தில், நோய்களுக்கு மருந்தாக மூலிகைகளை அளிக்கும் போது அதோடு நெய்யும் பயன்படுத்தப்படும். அதற்குக் காரணம் நெய் மூலிகையில் உள்ள மருந்துகளை உள்ளிழுத்து, அந்தந்த பாகங்களுக்கு சீராக அனுப்புகிறது.

இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சுத்தமான உணவு என்பதால், தூய்மையை நினைவூட்டுகிறது. அதன் நறுமணம் மனதிற்கு நல்ல எண்ணங்களை அளிக்கும். இதனால் நெய் பாசிடிவ் உணர்வு, உடல் வளர்ச்சி மற்றும் வேலைகளில் கவனம் ஆகியவற்றை தூண்டுவதற்கு உதவுவதாகவும் கருதுகின்றனர்.

எண்ணெய் வகைகளை சூடேற்றும் போது அதனுடைய வெப்ப நிலையில் மாற்றம் உண்டாகும். இவை உடலுக்கு ஏற்புடையதல்ல. ஆனால் நெய்யை எவ்வளவு சூடாக்கினாலும் அதன் தன்மை சிறிதும் மாறாது. 482 பாரன் ஹீட்டுக்கு மேல் சூடாக்கினாலும் அதன் தன்மை மாறாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டு முழுவதும் செக்கில் ஆட்டிய எண்ணெயை வைத்து பாதுகாப்பது போல் நெய்யையும் வருடக்கணக்காக வைத்திருந்து பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் இதனு டைய பயன்கள் அப்படியே முழுமையாக கிடைக்கும்.. அதனால் தான் மருத்துவத்துறையில் நெய் பயன்பாடு இருந்ததை உணரலாம்.

தீ விபத்துகளில் ஏற்படும் சிறிய அளவு தீக்காயங்கள் கூட மிகுந்த வேதனையைத் தருவதாக இருக்கிறது. தீக்காயங்களுக்கு சிறந்த இயற்கை மருத்துவ களிம்பாக பண்டைய காலத்திலேயே நெய் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தீக்காயம் பட்ட இடங்களில் தினமும் சுத்தமான பசு நெய்யை தடவி வருவதால் காயத்தில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சல் தன்மை குறைவதோடு, விரைவில் தீக்காயங்கள் குணமாகி தீக்காயங்களால் ஏற்படும் அழுத்தமான தழும்புகள் உருவாவதையும் தடுக்கிறது.