மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மிக அதிகமாக உள்ளது. ஆகவே மீன்களை உட்கொள்வதால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் அதிகரிக்கிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் பல்வேறு உடல் செயல்பாடுகளை சீராக்கி, உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. இந்த அமிலங்கள் நம் உடலில் உற்பத்தியாவதில்லை. உணவில் ஆளிவிதை, அவகேடோ, வால் நட், சோயா பீன்ஸ்,வெந்தயம், காலிஃப்ள்வர் போன்றவற்றிலும் இவைஉண்டு.
மீனின் கல்லீரலில் இருக்கும் எண்ணெயை சுத்தம் செய்து பல நிலைகளுக்கு பிறகு மாத்திரைகளாக கிடைக்கிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த கேப்ஸ்யூல்கள் அனைத்து மருந்துகடைகளிலும் கிடைக்கிறது. இது காட் லிவர் ஆயில் என்று அழைக்கப்படுகிறது.
மீன் எண்ணெய் :
மீன் எண்ணெய் என்பது மீன்களின் ஈரல் பகுதியில் இருந்து பெறப்படுகிறது. கானாங்கெளுத்தி, சூரை மீன் போன்ற மீன்களில் இருந்து மீன் எண்ணெய் பெறப்பட்டாலும், அட்லாண்டிக் பெருங்கடலில் வாழும் அட்லாண்டிக் காட் எனப்படும் பண்ணா மீன் கல்லீரலில் இருந்து பெறப்படும் மீன் எண்ணையே மிகுந்த வீரியம் மிக்கதாக இருக்கின்றன.
இவை கூந்தலின் வேர்க்கால்களை புத்துணர்ச்சி பெறச் செய்து, கூந்தலை ஆரோக்கியமாக மாற்றி, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்று கூறப்படுகிறது.
மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.
மீன் எண்ணெயின் பயன்கள்:
புற்றுநோய்க்கு எதிர்ப்பு
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது மீன் எண்ணெய்..ஒமேகா 3 எனப்படும் கொழுப்பு அமிலங்களில் இருக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது அமில மான இபிஏ, டிஹெச்ஏ என்னும் அமில அமிலமானது கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீன், கடலுக் கடியில் இருக்கும் பாசி போன்றவற்றில் இருந்து கிடைக்கின்றது.இது புற்று நோய் கட்டி களின் எண்ணிக்கையை அதிக அளவு குறைப்பதாக தெரிவித்துள்ளது.
ரிக்கெட்ஸ்
பண்ணா மீனின் ஈரலில் இருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணெய் மாத்திரை பன்னெடுங்காலமாகவே மேலைநாடுகளில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ரிக்கெட்ஸ் எனப்படும் வலுக்குறைந்த எலும்புகள் குறைபாட்டை போக்குவதற்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
கண்பார்வை
மீன் எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.கண் சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படாமல் தடுப்பதற்கு ஒரு சிறந்த உணவுப் பொருளாக மீன் எண்ணெய் மாத்திரை இருக்கிறது. இதில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ சத்து கண்களில் ஏற்படும் திசு வளர்ச்சி குறைவு மற்றும் செல்களின் வீக்கத்தைக் கட்டுப்படுத்தி, கண்பார்வையை காக்கிறது.
இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்க
இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கக்கூடிய ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களில் மீன் எண்ணெய் மாத்திரைகள் ஒன்றாகும்.இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றுகிறது ஒமேகா3 கொழுப்பு அமிலம்.உடலில் கெட்ட கொலஸ்ட்ரோலை சேராமல் தடுத்து, இதயம் மற்றும் உடலின் பிற பகுதிகளில் தொடர்பு கொள்ளும் நரம்புகளில் அடைப்பு ஏற்படாமல் காத்து இதயத்திற்கு சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்து மாரடைப்பு, இதயத் துடிப்பு குறைதல் போன்ற இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது.
அல்சர் குணமாக
அல்சர் புண்களை குணமாக்குவதற்கு ஒரு சிறந்த மருந்தாக மீன் எண்ணெய் மாத்திரை இருக்கிறது. இந்த மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏற்பட்டிருக்கின்ற அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்களை விரைவில் ஆற்றும்.
நீரிழிவு தடுப்பு
மண்ணீரல் அழற்சியால் உடலில் இன்சுலின் சுரப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் தான் நீரிழிவு பாதிப்பு உண்டாகிறது.நீரிழிவு இருப்பவர்கள் இந்த மாத்திரையை எடுத்துகொள்ளும் போது இன்சுலின் சுரப்பு தூண்டப்பட்டு நீரிழிவு கட்டுப்படுத்தப்படுகிறது.
கூந்தலுக்கு நல்லதுமீன் எண்ணெயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு தன்மை, உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உச்சந்தலையை கிருமி மற்றும் தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.முடி உதிர்வுக்கான டெலோஜன் காலகட்டத்தைக் குறைத்து முடி இழப்பைக் குறைக்க உதவுகிறதுசெபம் வெளிப்பாட்டை கட்டுப்படுத்தி, உச்சந்தலையில் எண்ணெய் சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது.